Wednesday, March 27, 2013

Thursday, March 14, 2013

சிவ பூஜை








எல்லாம் வல்ல ஸத்குரு மூர்த்தியின் திருவருள். 
சிவ பூஜை. ஸத்குரு  பாதங்களே சரணம்!

Thursday, February 28, 2013

பால் மிளகு

 எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
அதன் பலனைக் கொடுக்கக் கூடிய பால் மிளகு குளியலும் நல்லது தான்.
பால் மிளகு தயாரிக்கும் முறை:
மிளகு - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
கசகசா - 50 கிராம்
கருஞ்சீரகம் - 25 கிராம்
வாங்கி வந்து நன்கு  காய வைத்து மிக்ஸியில்  திரித்து சலித்து டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் அளவு அந்தப் பொடியை கலந்து காய்ச்சி தேய்த்துக் குளிக்க உடம்பில் உஷ்ணம் குறையும்.

Monday, January 21, 2013

ஸத்குரு வாழ்த்து

ஓம் நமோ பகவதே ஞானானந்தாய!
ஸத்குரு வாழ்த்து
( நேரிசை ஆசிரியப்பா )
நித்த னி ருமல னி ராமயன் ,பூரணன்
சுத்த பரஞ்சுடர் சுயம் பிரகாசன்
ஞாலம் வணங்கும் ஞானானந்தமாய்
உலகெலாம் உணரும் உண்மையறிவாய்,
அறம் பொருள் இன்பம் அழியா வீடென
திறம்படக் காட்டிய செம்மை நெறியினன்,
தன்னை யறிவித்துத் தற்பரமாக்கி
என்னு ளத்திருந்த ஏக நாயகன்.
பந்தமனைத்தும் பாழ்படத் தள்ளியென்
சிந்தையுட் புகுந்த செழுஞ் சுடர் ஜோதி.
எல்லைக் கடங்கா ஏகப் பெருவெளி
தில்லையில் கண்டு தினமும் களித்தவன்
இறவா மனத்தை இறக்க உணர்த்திப் பிறவா
நெறி தரும் பேரறிவாளன்.
நற்குண மனைத்தும் நண்ணிய பெருந்தகை
சற் குரு ஞானானந்த சாந்த மெய்ச் செல்வன்.
பூத முதலாய் பொலிந்திடு நாத ஒளியை,
பேத முங் கடந்த பெருந்தகை மூர்த்தி
மூலாதார முதலாயுள்ள மூர்த்தி ரூபத்தை
மேலா றாதாரமும் வெறு வெளி கண்ட வித்தகன்.
மண்டல மூன்றிலும் மண்ணிய உருவிலும்
கண்டவை அனைத்திலும் கடவுளாய் நின்றோன்.
ஸோகம் பாவனை சுத்தமாய் ச் செய்யென
ஆகம நூல் கொண்டு அன்போடுணர்த்தி,
சங்கரன் காட்டிய சனகாதி நால்வருக்கு
இங்கிதமாய் எடுத்துரைத்த சின் முத்திரையை
வாக்கிறந்த பூரணமாய் மறைக் கப்பாலாய்
தேக்கிறந்த எல்லாமாய் அல்லவுமாயிருந்து
திரையிலாக் கடல் போல சலனம் தீர்ந்து
இரையுடல் மறந்து இன்ப நிலை காட்டி,
ஒரு மொழியாலே உண்மை உணர்த்தி
திரு உணர் வாளன்  மருளிலா மனத்தன்,
எண்ணிய எண்ணமெல்லாம் தெரிந்து எனக்கு
தண்ணருள் செய்த ஞானானந்த தற்பரன்.
ஒரு மொழி பகர்ந்த உதவியாலவன்றன்
இருபத முப்போ திறைஞ்சி வாழ்த்துவனே.!


எடப்பாடி கோ. வை. சின்ன ஆறுமுக பக்தர்.

ஞானானந்த சுவாமி அருள் பெற்ற இவரால் எழுதப் பட்டதை இங்கு பதிவு செய்வதில் குரு க்ருபை அருள் செய்தது.

Tuesday, December 18, 2012

செட்டிப் புண்ணியத்தில் ஸ்ரீ வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை

செட்டிப் புண்ணியத்தில் ஸ்ரீ வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை
அருள்மிகு தேவநாதப் பெருமாள் கோவில், செட்டிப் புண்ணியம் - 603204, காஞ்சி புரம் மாவட்டம் .
நந்தன வருடம் தை மாதம் 13 ம் தேதி ஜனவரி 27ம் தேதி ( 27-1-2013) அன்று மாணவ மாணவியர் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று  வெற்றி பெறுவதற்காக, இத்திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ யோகா ஹயக்ரீவருக்கு  ஸ்ரீ வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை வழக்கம் போல சிறப்பாக நடைபெற உள்ளது.
ரூ. 50, கட்டணமாக செலுத்தி கலந்து கொள்ளலாம் .
நிகழ்ச்சி நிரல்
காலை 4.30 மணி க்கு விஸ்வ ரூப தரிசனம்
6 மணி முதல் 7.30 மணி வரை ரட்சை பூஜை
9மணிக்கு  ஸ்ரீ ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
செயல் அலுவலர் ,
அருள்மிகு தேவநாத சுவாமி திருக்கோவில்,
செட்டிப்புண்ணியம் ,
செங்கல்பட்டு வட்டம்
603204.
தொலைபேசி ; 8675127999 / 9942993770.
நன்றி. வாழ்க பாரதம்!

Friday, October 19, 2012

சிவசைலம்

சிவசைலம்
எல்லாம் வல்ல ஸ த் குரு மூர்த்தியின் திருவருளால் சிவசைலம் என்ற திருத்தலத்தைப் பற்றி எழுத நினைக்கிறேன். முழுமை அடைய கணபதியைப் பணிகின்றேன்.


சிவசைலபதியையும் பரம கல்யாணி நாயகியையும் அழகிய
ஸ்நேக புரத்தையும் கடநா  நதியையும் வணங்குகின்றேன்.
அத்ரி மஹ ரிஷியால் பூஜை செய்யப்பட்டவரும் மங்களத்தைச் செய்பவரும் பக்தர்களின் கோரிக்கைகளை நன்றாய் பூர்த்தி செய்கின்றவரும் பதினாறு ஆவடையாளுடன் கூடியவருமாகிய சிவசைல பதியை நமஸ்கரிக்கின்றேன்.
நான்கு கைகளுடன் கூடியவளும் விசாலமான நேத்திரங்களுடன் கூடியவளும் செம்பரத்தை புஷ்பத்திற்கு சமமான சோபையுடையவளும் ஆகிய பரம கல்யாணியை சப்தார்த்தங்கள் நன்கு விளங்குவதன் பொருட்டு நமஸ்கரிக்கின்றேன்.