Thursday, October 12, 2017

12 ராசிகளும் அதற்குரிய நதிகளும்

12 ராசிகளும் அதற்குரிய நதிகளும்

மேஷ ராசி – கங்கை நதி
ரிஷப ராசி – நர்மதா நதி
மிதுன ராசி – சரஸ்வதி நதி
கடக ராசி – யமுனை நதி
சிம்ம ராசி – கோதாவரி நதி
கன்னி ராசி – க்ருஷ்ணா நதி,சங்கு
தீர்த்தம்(திருக்கழுக்குன்றம்,தமிழகம்)
துலா ராசி – காவேரி நதி
வ்ருச்சிக ராசி – தாம்ரபர்ணி நதி மற்றும் பீமா நதி
தனுசு ராசி – ப்ரஹ்மபுத்ரா நதி (தப்தி நதி)
மகர ராசி – துங்கபத்ரா நதி
கும்பராசி - சிந்து நதி

மீன ராசி – ப்ரணீதா நதி 
இவைகளிலேயே புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

புஷ்கரம்

புஷ்கரம் என்பது ப்ரஹ்மாவின் கமண்டலுவில் உள்ள தேவதையாகும். தேவகுரு ப்ருஹஸ்பதியானவர் ப்ரஹ்மாவை நோக்கித் தவமிருந்து புஷ்கரத்தைத் தனக்குத் தருமாறு வேண்டினார். புஷ்கர தேவதையானவர் தான் ப்ருஹஸ்பதியுடன் செல்லமுடியாது என்றும் ப்ருஹஸ்பதி இருக்கும் ராசிகளுக்குரிய நதிகளில் தான் வசிப்பதாகவும் சொன்னார். அதன்படியே ப்ருஹஸ்பதி (குரு) எந்த ராசிகளில் உள்ளாரோ அந்தந்த ராசிகளுக்குரிய நதிகளில் நடத்தப்படுவதே புஷ்கர விழாவாகும்.  

அடையாளமாக 12 ராசிகள், 12 வருடங்களுக்கொருமுறை வருவதால் 12 நாள்கள் நடத்துகிறார்கள். ப்ருஹஸ்பதி அந்த ராசியில் உள்ள வரை புஷ்கர பலன் இருக்கும். 

Tuesday, May 30, 2017

ஆசௌசம் – வ்ருத்தி,சீதகம் நாட்கள்ஆசௌச காண்டம்

ஆசௌசம் – வ்ருத்தி,சீதகம் நாட்கள்
ஆசௌச காண்டம் – ஆசௌசம் என்றால் ஜ்ஞாதிகள் முதலானவர்கள் பிறந்த போதாவது இறந்த போதாவது அசுசியாக இருப்பது. தானம் முதலான கர்மங்களில் யோக்கியமில்லாமையைத் தெரிவிப்பதும், புண்யாதி கர்மாக்களைச் செய்யக்கூடாமல் விசேஷமான பாபரூபமாகவும் இருப்பதற்கு ஆசௌசம் என்று சொல்லப்படுகிறது.
ஸ்நானத்தால் போகக்கூடிய ஆசௌசம் எதுவெனில் அறிந்த சம்பந்தத்தையுடைய பந்துக்களின் மரணம் முதலானவைகளால் ஏற்பட்ட ஆசௌசங்கள்.
காலம்,ஸ்நானம் இவ்விரண்டிலும் போக்கக்கூடிய ஆசௌசம் எதுவெனில்  ஜ்ஞாதிகளின் பிறப்பு,இறப்பு இவைகளால் ஏற்பட்ட ஆசௌசங்கள்.
எது ப்ரேத பிண்டதானம் முதலானவைகளைச் செய்யக் காரணமாயும், அசுசியாக இருத்தலைச் செய்வதாயும் இருந்து கொண்டு,ஒருவனை அண்டிக்கொண்டு காலம்,ஸ்நானம் இவைகளால் போகக்கூடியதாக இருக்கிறதோ அதுவே ஆசௌசம் என்று சொல்லப்படுகிறது.
1.ஜ்ஞாதிகள் – ஜ்ஞாதிகள் இருவகைப்படும். முதலாவது ஸபிண்டர்கள், அதாவது பத்து நாள் தாயாதர்கள். 2வது ஸமானோதகர்கள்,அதாவது மூன்று நாள் தாயாதர்கள். அவர்களுள் ஸபிண்டர்கள் என்பது கூடஸ்தனிலிருந்து ஏழு தலைமுறை வரையில் உள்ளவர்கள். ஸமானோதகர்கள் எட்டாவது தலைமுறை முதல் பதினான்காவது தலைமுறை வரையிலுள்ளவர்கள்.
2.ஒருவனுக்கு பிதா,பிதாமஹன்,ப்ரபிதாமஹன்,புத்ரன்,பௌத்ரன்,ப்ரபௌத்ரன், இவன் உள்பட ஏழுதலைமுறை.

3.தகப்பன் பிள்ளைகளும்,அண்ணன் தம்பிகளும் தாயாதர்களே.  

                                           2. பிறப்புத்தீட்டு
1.      நாலாவது மாசத்தில், கர்ப்பத்தின் விச்சித்தி உண்டானால் பிதாவுக்கு ஸ்நானம், மாதாவுக்கு 4 நாள் தீட்டு.
 5,6 மாசங்களில் விச்சித்தியுண்டானால் பிதாவுக்கும் ஸபிண்டர்களுக்கும் ஸ்நானம். பிண்டம் போல் விழுந்தால் மேற்சொன்னவர்களுக்கு 3 நாள் தீட்டு. மாதாவுக்கு 5வது  மாசத்தில் 5 நாள், 6வது மாசத்தில் 6 நாள் தீட்டு.

2.      ஏழாவது மாசம் முதல் பிறந்தது பிள்ளையானால் மாதாபிதாக்களுக்கும் ஸபிண்டர்களுக்கும் பத்து நாள் தீட்டும், ஸமானோதகர்களுக்கு 3 நாள் தீட்டுமுண்டு.
3.      புருஷ சிசுவானால் 30 தினங்களுக்குப் பிறகும், ஸ்த்ரீ சிசுவானால் 40 தினங்களுக்குப் பிறகும் மாதாவுக்கு பாண்டஸ்பர்ச யோக்யதை உண்டாகும்.  
4.      ஜனனத்தில் பிதாவுக்கு 2 நாழிகை சுத்தி. வெகுதூரத்தில் இருந்தால் ஒருநாள் சுத்தி.  அல்பதூரத்திலிருந்தால் ஒரு பகல் சுத்தி.  


                                          3.இறப்புத்தீட்டு
                    1. பத்து நாள் தீட்டு
1.தசராத்ரஜ்ஞாதிகளின் மரணத்தில் ஆசௌசம்.
2.பிறந்து பத்து நாட்களுக்கு மேல் புருஷசிசுவின் மரணத்திலும், விவாஹம் வரையில் ஸ்த்ரீப்ரஜையின் மரணத்திலும், தாய்,பிதா,பின்னோதரப்ராதா,ஸஹோதரப்ராதா இவர்களுக்கு 10 நாள் தீட்டு.
3. 7 வயதிற்குட்பட்டு உபநயனமான தசராத்ரஜ்ஞாதிகளின் பிள்ளைகள் இறந்தால் 10 நாள் தீட்டு.
4.  7 வயது முதல் உபநயனமானாலும், ஆகாமலிருந்தாலும் புருஷப்ரஜையின் மரணத்தில் 10 நாள் தீட்டு.
                             2. புருஷர்களுக்கு மூன்றுநாள் தீட்டு
1.மாதாமஹன், 2.மாதாமஹீ, 3. அம்மான், 4.அம்மாமி, 5.மாமனார், 6.மாமியார், 7.தாயின் ஸஹோதரி, 8.தகப்பனின் ஸஹோதரி. 9.உபநீதனான மருமான், 10.உபநீதனான தௌஹித்ரன், 11.உபநீதனான ஸமானோதகன், 12.விவாஹமான பெண், 13.ஸஹோதரி, 14.ஜனகமாதா,
15.ஜனகபிதா, 16.தத்தனான பிள்ளை,
17. 25வது மாசம் முதல் 6 வருஷம் முடிய அனுபநீதனான தசராத்ரஜ்ஞாதிகளின் பிள்ளை,
18. 24 மாசங்களுக்குட்பட்டு சௌளமாகிவிட்ட ஜ்ஞாதிகளின் பிள்ளை,
19. 7 வது வருஷம் முதல் விவாஹம் வரையில் தசராத்ரஜ்ஞாதிகளின் பெண் ( ஸ்த்ரீ சிசு விஷயத்தில் 3 தலைமுறை வரையில் தான் ஸாபிண்ட்யமென்பதை கவனிக்கவும். )>
                     20. ஸமானோதகர்களுக்கு
1.ஏழு வயதிற்குட்பட்டு உபநயமான ஜ்ஞாதிகளின் பிள்ளை.
2.ஏழு வயது முதல் உபநயனமானாலும்  ஆகாவிட்டாலும் ஜ்ஞாதிகளின் பிள்ளை.
இவர்களின் மரணத்தில் 3 நாள் தீட்டு.
   

                    3.புருஷர்களுக்கு பக்ஷிணித்தீட்டு
(பக்ஷிணி என்பது இரண்டு இரவும் ஒருபகலும் அல்லது ஒரு இரவும் இரண்டு பகலும் உள்ள் காலம்)
1.அத்தையின் பிள்ளை, பெண்
2.அம்மானுடைய பிள்ளை,பெண்
3.தாய் ஸஹோதரியின் பிள்ளை,பெண்
4.ஸஹோதரின் பெண்
5.ஸஹோதரனுடைய கல்யாணமான பெண்
6.பித்ருவ்யனுடைய பெண்
7.பௌத்ரீ
8.தௌஹித்ரீ
9. 3 வயதிற்கு மேல் உபநயனமில்லாத மருமான்,தௌஹித்ரன்
         
                   4.புருஷர்களுக்கு 1 நாள் தீட்டு
1.ஸபத்னீமாதாவின் ஸஹோதரன்,ஸஹோதரி,பெண்
2.மேற்கண்ட மூவருடைய பெண்,பிள்ளை
3.மைத்துனன்
4.பின்னோதரர்களான சிறியதகப்பன்,பெரிய தகப்பன் இவர்களின் பெண்
5.பின்னோதர ப்ராதாவின் பெண்
6.பின்னோதர அத்தை
7.மேற்படியாளுடைய பெண்,பிள்ளை
8.ஸபத்னீமாதாவின் தகப்பன்,தாயார்
9. 25வது மாசம் முதல் 6 வருஷம் முடிவு வரையில் விவாஹமாகாத ஜ்ஞாதியின் பெண்
10. ஜநக ப்ராதா
11.ஜநக ஸபிண்டன்
12.பத்னீ,அவள் ஸந்ததி இரண்டுமில்லாத விஷயத்தில் மாமனார்,மாமியார்
13. 6 மாசத்திற்கு மேல் 24 மாசத்திற்குட்பட்ட சௌளமாகாத ஜ்ஞாதியின் பிள்ளை


4.ஸ்த்ரீகளுக்குப் பர்த்தாவுடன் ஏற்படும் தீட்டைத்தவிர தனிமையாக ஏற்படும் தீட்டுகள்
                 1.ஸ்த்ரீகளுக்கு 3 நாள் தீட்டு
1.உபநயனமான ஸஹோதரன்
2.உபநயனமான மருமான்
3.ஸஹோதரியின் உபநயனமான பிள்ளை
4.ஸபத்னீமாதா
                2.ஸ்த்ரீகளுக்கு பக்ஷிண்யாசௌசம்
1.பித்ருவ்யன்,2.தாயின் ஸ்ஹோதரி,3.மாதுலன்,4.அத்தை,
5.மேற்கண்ட நால்வருடைய பிள்ளை,பெண்,
6.பிதாமஹன்,7.பிதாமஹீ,8.மாதாமஹன்,9.மாதாமஹீ,10.ஸஹோதரீ,
11.ஸஹோதரியின் பெண், 12.மருமாள்.
                       3.ஸ்த்ரீகளுக்கு 1 நாள் தீட்டு
1.ஸபத்னீமாதாவின் புத்ரன்,புத்ரீ,பகிநீ,ஸஹோதரன்.
2.மேற்சொன்ன நால்வரின் பெண்கள்,பிள்ளைகள்.
3.பின்னோதர பித்ருவ்யன்,4.பின்னோதர அத்தை,
5.மேற்படி இருவர்களுடைய பெண்கள்,பிள்ளைகள்,
6.ஸபத்னீமாதாவின் தாய்,தகப்பன்

Saturday, December 19, 2015

Tuesday, December 1, 2015

லலிதா நவரத்ன மாலை

ஞான கணேசா சரணம்! சரணம்! ஞான ஸ்கந்தா சரணம்! சரணம்!
ஞான புரீசா சரணம்! சரணம்! ஞானாம்பிகையே சரணம்! சரணம்!
ஞான ஸத்குரோ சரணம்! சரணம்! ஞானானந்தா சரணம்! சரணம்!

                                                  காப்பு
               ஆக்கும் தொழில் ஐங்கரனாரற்ற நலம்
                                   பூக்கும் நகையாள் புவனேச்வரிபால்
                சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
                               காக்கும் கணநாயக வாரணமே!

         மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
          மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                            மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                                   வைரம்
கற்றும் தெளியார் காடே கதியாய்
                                 கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெரியார் நிலையென்னில் அவம்
                               பெருகும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாழ் வயிரப்
                          பகைவர்க்கெமனாக எடுத்தவளே!
வற்றாத அருட்சுனையே வருவாய்
                                 மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

                                          நீலம்
 மூலக்கனலே சரணம்! சரணம்!
                       முடியா முதலே சரணம்! சரணம்!
கோலக்கிளியே சரணம்! சரணம்!
                      குன்றாத ஒளிக்குவையே சரணம்!
நீலத்திருமேனியிலே நினைவாய்
                  நினைவற்றளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய்
                    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                         முத்து
முத்தேவரும் முத்தொழிலாற்றிடவே
                        முன் நின்றருளும் முதல்வீ சரணம்!
வித்தே விளைவே சரணம்! சரணம்!
                  வேதாந்த நிவாஸினியே! சரணம்!
 தத்தேறிய நான் தனயன் தாய் நீ
                 சாகாத வரம் த்ரவே வருவாய்!
மத்தேறுததிக்கிணை வாழ்வடையேன்
                     மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                     பவளம்
அந்தி மயங்கிய வானவிதானம்
                      அன்னை நடம்செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழிவாரோ
             தேம்பொழிலாமிது செய்தவளாரோ
எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள்
               எண்ணுபவர்க்கருள் எண்ணமிகுந்தாள்
மந்திர வேத மயப்பொருளானாள்
                           மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                          மாணிக்கம்
காணக்கிடையாக் கதியானவளே!
                 கருதக்கிடையாக் கலையானவளே!
பூணக்கிடையாப் பொலிவானவளே!
              புனையக் கிடையாப் புதுமைத்தவளே!
நாணித்திரு  நாமமும் நின் துதியும்
                   நவிலாதவரை நாடாதவளே!
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்
                         மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                    மரகதம்
மரகதவடிவே சரணம்! சரணம்!
                   மதுரிதபதமே சரணம்! சரணம்!
ஸுரபதி பணியத்திகழ்வாய் சரணம்!
               ச்ருதிஜதிலயமே இசையே சரணம்!
ஹர ஹர சிவ என்றடியவர் குழும
                          அவரருள் பெற அருளமுதே சரணம்!
வரநவநிதியே சரணம்! சரணம்!
                          மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                     கோமேதகம்
பூ மேவிய நான் புரியும் செயல்கள்
                      பொன்றாது பயன் குன்றா வரமும்
தீ மேல் இடினும் ஜெய சக்தி எனத்
                     திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
                                குழல்வாய் மொழியே தருவாய்! தருவாய்!
மாமேருவிலே வளர்கோகிலமே
                              மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                         பதுமராகம்
ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
                   ராகவிலாஸ வியாபினி அம்பா
 சஞ்சல ரோக நிவாரணி வாணி
                      சாம்பவி சந்த்ரகலாதரி ராணி
அஞ்சனமேனி அலங்க்ருத பூரணி
                   அம்ருத ஸ்வரூபிணீ  நித்ய கல்யாணி
மஞ்சுளமேரு ஸ்ருங்க நிவாஸினி
                        மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                        வைடூரியம்
வலையொத்த வினை கலையொத்த மனம்
                                மருளப்  பறையா  றொலியொத்தவிதால்
நிலையற்றளியேன் முடியத்தகுமோ
                           நிகளம் துகளாக வரம் தருவாய்
அலைவற் றசைவற்றநுபூதிபெறும்
                             அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய்!
                         மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                                             பயன்
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
           நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
             சிவரத்தினமாய்த் திகழ்வாரவரே!

   மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                         மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
     மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
                             மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

ஜெய சிவரமணீ குருகுஹ ஜனனீ - ஜெய மனவன ஹரிணீ
ஜெய ஓம் ஸ்ரீமாதா மாதா - ஜெய ஜெய ஜகன் மாதா
மாதா - ஜெய ஓம் ஸ்ரீமாத மாதா - ஜெய ஜெய ஜகன் மாதா !
                              ஸத்குரு பாதம் துணை