வந்தே மாதரம்.
எம் ஜென்ம பூமி தாயே! எம் கர்ம பூமி நீயே!
எம் புண்ய பூமி தாயே! குலதெய்வம் என்றும் நீயே!
வாழ்வாம் மலர்தனை, உன்
திருவடிதனில் படைத்தோம்
ஏழேழு பிறவி தோறும்,
உனையே வணங்கி வாழ்வோம்
உனதேவல் செய்துயர்வோம்
எம் ஜென்ம பூமி தாயே!
எம்
கர்ம பூமி நீயே!
எம் புண்ய பூமி தாயே!
குலதெய்வம் என்றும்
நீயே!
உணவாகி நீரும் ஆகி,
உடலத்துடன் கலந்தாய்
ஊனாகி உதிரமாகி,
எம்மில் நிறைந்து நின்றாய்
உனக்காகவே எம் வாழ்வு
உனக்காக
சாவும் ஏற்போம்
உனக்காக தொண்டு செய்தே
வளமோங்கும் நிலை சமைப்போம்
உனதேவல் செய்துயர்வோம்
எம் ஜென்ம பூமி தாயே! எம் கர்ம பூமி நீயே!
எம் புண்ய பூமி தாயே! குலதெய்வம் என்றும் நீயே!
ஒப்பற்ற இமயம் உந்தன்
ஒளி வீசும்
மகுடமாகும்
முப்புறமும் சூழும் கடல்கள்
ஓயாது மணிகள் தூவும்
இணையற்ற நாடெம் நாடு
என்றே முழக்கம்
செய்வோம்
கணமேனும் உனை மறந்தே
உயிர் வாழச்
சகிய மாட்டோம்
உனதேவல் செய்துயர்வோம்
எம் ஜென்ம பூமி தாயே! எம் கர்ம பூமி நீயே!
எம் புண்ய பூமி தாயே! குலதெய்வம் என்றும் நீயே!
நீ காத்த நெறிமுறைகள்
காலத்தை வென்ற
அமுதம்
நீ உறையும் ஆலயங்கள்
தர்மத்தின் மையமாகும்
பண்பின் பதாகை ஏந்தி
புவியெங்கும் விஜயம் செய்வோம்
பண்பாட்டின் தென்றல் ஆகி
உள்ளங்கள் குளிர
வைப்போம்
உனதேவல் செய்துயர்வோம்.
எம் ஜென்ம பூமி தாயே! எம் கர்ம பூமி நீயே!
எம் புண்ய பூமி தாயே! குலதெய்வம் என்றும் நீயே!
தாய்ப்பாசம் ஓங்க வைப்போம்
தனயர்கள் இணைய வைப்போம்
தாய் நாடுயர்த்தும் உணர்வை
நெஞ்சங்கள் தோறும்
வளர்ப்போம்
கைம்மாறு கருதிடாமல்
கடமைகள் ஆற்ற வந்தோம்
கணமேனும் துஞ்சிடாமல்
பயணம் தொடர்ந்து செல்வோம்
உனதேவல் செய்துயர்வோம்
எம் ஜென்ம பூமி தாயே! எம் கர்ம பூமி நீயே!
எம் புண்ய பூமி தாயே! குலதெய்வம் என்றும் நீயே!
வாழ்வாம் மலர்தனை உன்
திருவடிதனில் படைத்தோம்
ஏழேழு பிறவி தோறும்,
உனையே வணங்கி வாழ்வோம்
உனதேவல் செய்துயர்வோம்.
ஜெய்ஹிந்த்.
No comments:
Post a Comment