ஸ்ரீஸத்குரு துதி
1.காலத்தை
வென்றொளி சேர் மேனி கொண்டான்
கவின்முறுவல்
மறையாத வதனம் கொண்டான்
ஞாலத்தில்
குழந்தைக்கும் குழந்தையாகி
ஞானமுடையோர்க்கு
அறிவின் மன்னராகி
சீலத்தில்
பெரியோரெல்லாம் வணங்கியேத்த
திருவடியால்
சிரம் அணிந்த செம்மல் ஆகி
கோலத்தில்
துறவரசாய் நின்றான் எங்கள் குரு
ஞானானந்தன்
எனும் தேசிகேசன்
2.அஞ்சு பொறியடக்கி மனம் அடக்கி மோன
ஆலயத்தில் நிராசையெனும் தூபம் காட்டி
விஞ்சுமுப சாந்தமெனும் விளக்கேற்றி
விருமான ஆனந்தம் நிவேதனம் செய்து
துஞ்சிவரும் அடியார்க்கு உறுதி காட்டும்
உயர் பூசை செய்கின்றான் கோவலூரில்
கிஞ்சுகம் சேர் தபோவனத்தில் வாழும் மூர்த்தி
கிளர் ஞானானந்தன் எனும் ஆசான் அம்மா! அம்மா!
கிஞ்சுகம் சேர் தென்னாங்கூரில் வாழும் மூர்த்தி
கிளர் ஞானானந்தன் எனும் ஆசான் அம்மா! அம்மா!
ஸ்ரீசரணம்
ஞான ஸ்கந்தா சரணம்! சரணம்!
ஞான புரீசா சரணம்! சரணம்!
ஞானாம்பிகையே சரணம்! சரணம்!
ஞான ஸத்குரோ சரணம்! சரணம்!
ஞானானந்தா சரணம்! சரணம்!
No comments:
Post a Comment