Tuesday, May 26, 2020

தீபஜோதி

தீபஜோதி    

தீபஜோதியாய் வருவாய் நீ தீப ஜோதியாய் வருவாய்
திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்

1.உனதருள் உளதேல் உலகாம் – இன்றேல்
உலக வாழ்வு கொடும் நரகாம்
தனதானிய ஸௌபாக்கியம் தருவாய்

திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்

2.பாற்கடல் உதித்த பொற்கொடியே – உந்தன்
பார்வை பெற்றவர்க்கேதும் எளிதாம்
சேர்த்தபின் பயனுறும் செல்வமும் தருவாய்

திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்
3.வீரத்திருமகளின் நோக்கம் – எல்லா
வெற்றியளிக்கும் மன ஊக்கம்
சீரும் சிறப்பும் மனத்திறமையும் தருவாய்

திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்

4.செந்தாமரை வளர் ஒளியே – ஐயன்
திருமார்பினுள மணியே
என் தாய் நினதருள் வாழ்க வாழ்க நீ

திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்

5.கமலநயனமிகும் கருணை – எந்தன்
கவிகள் பாடுமிடம் பொழிவாய்
வம்சமுழுதும் எனக்கருள் வரம் தருவாய்

திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்

6.தோகை நினதருளின் துணையால் – நான்
தொட்டதனைத்தும் பயனளிக்கும்
யோக போக சுக வாழ்க்கையும் தருவாய்

திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்

No comments:

Post a Comment