Monday, March 9, 2020

ஸ்ரீகுருஜி (ஸ்வாமி ஹரிதாஸகிரி)திருப்பள்ளியெழுச்சி

ஸ்ரீகுருஜி திருப்பள்ளியெழுச்சி

சித்தர் உறை அண்ணாமலை பக்தர் நிறை சிதம்பரம் (ஜீவன்)
முக்தர் வாழும் காஞ்சீபுரம் சூழ்ந்த நற்க்ஷேத்திரம்
திரு உறை தென்னாங்கூர் மேவிடும் தவத்திரு
ஸ்வாமி ஹரிதாஸகிரியே பள்ளியெழுந்தருள்வாயே!

தானம் தவம் சிறந்த தபோவனம் உறை
ஞானானந்தர் எமக்களித்த
ஞானகுருதேவா உந்தன்
நாமம் பாடிப்பரவசமாய்
நாடிவந்தோம் நின்வாயிலில்  
ஸ்வாமி ஹரிதாஸகிரியே பள்ளியெழுந்தருள்வாயே!

ஐங்கரன் நல்வாணி ஆறுமுகன் அம்மை அப்பன்
நாராயணனும் ஓர் உருவாய் வந்த குருதேவா உந்தன்
தரிசனமே காணவேண்டி காத்து நின்றோம் நின்வாயிலில்
ஸ்வாமி ஹரிதாஸகிரியே பள்ளியெழுந்தருள்வாயே!

தஞ்சம் என்று வந்தவர்க்கு அஞ்சேலென்று கூறி என்றும்
நெஞ்சினிலே நிறைந்தருள் செய் ஸத்குருதேவா உந்தன்
கஞ்சமலர்தாள் பணிந்து உய்யவழி தேடிவந்தோம்
ஸ்வாமி ஹரிதாஸகிரியே பள்ளியெழுந்தருள்வாயே!

ஸ்ரீஞானானந்த சுப்ரபாத பஞ்சகம்

   ஸ்ரீஞானானந்த சுப்ரபாத பஞ்சகம்

ஐங்கரன் நல்வாணி அருட்குரவன்
சங்கரனும் ஷண்முகனும் நாரணனும்
அம்பிகையும் துர்கையும் ஸத்குருவும் ஆவார் துணை.

ஞான கணேசா சரணம்! சரணம்!
ஞான ஸ்கந்தா சரணம்! சரணம்!
ஞான புரீசா சரணம்! சரணம்!
ஞானாம்பிகையே சரணம்! சரணம்!
ஞான ஸத்குரோ சரணம்! சரணம்!

ஞானானந்தா சரணம்! சரணம்!

மங்களாபுரி ஸம்பூத மஹனீயாத்புத
சங்கராதி ஜகன்னாத ஸாம்ராஜ்ய சாலினே
சிவரத்னகிரி யோகஸுதராஜஹம்ஸ
ஞானானந்த கிரிப்ரபோ தவ ஸுப்ரபாதம்!

தபோவன மாஹாச்ரய பவித்ர ப்ரஸன்ன
ஸுசோபன ஸுராச்ரய ஸுசித்ரப்ரகாச
தபோதன ஸுரக்ஷக விசித்ர ஸ்வபாவ
ஞானானந்த கிரிப்ரபோ தவ ஸுப்ரபாதம்!

ஸித்தேச்வர பூஸுரேந்த்ர நவநாயகேச
ஸத்யாச்ரய ஸன்னிதான ஸுமஹானுபாவ
பக்த்யோத்பவ ப்ரேமரத்ன மகுடாபிராம
ஞானானந்த கிரிப்ரபோ தவ ஸுப்ரபாதம்!

மனோநாச சிதாகாச மஹாதேவ தேவ
மனோல்லாஸ மஹாமாய பராசக்தி மாதா
மனோபாஸ துலாதக்த தக்ஷிணஹாலாஸ்ய தேவ
ஞானானந்த கிரிப்ரபோ தவ ஸுப்ரபாதம்!

ப்ரஹ்மானந்த ப்ரதாயக பரிவ்ராஜகேந்த்ர
ப்ரஹ்மேசாதி ஸுரநாதபரதேவ தேவ
ப்ரஹ்மார்ப்பண  ப்ரஹ்மதேஜோஜ்வல ஸ்வப்ரகாச
ஞானானந்த கிரிப்ரபோ தவ ஸுப்ரபாதம்!

ஞானானந்தம்! ஞானானந்தம்! ஞானானந்தம்!

ஸ்ரீஞானபுரீச்வரர் தேவாரம்

ஸ்ரீஞானபுரீச்வரர் தேவாரம்

மோதகபாசாங்குச கனகும்பமும்
மெய்யொளி ஓர் கொம்பும்
மாதவர் மனமலர் மாறிலாதுரை தரும்
மலரடியிரண்டோடே

நாத ஓங்காரத் திருவுருக் கொண்டு
ஞானானந்த தபோவனம் வாழ்
நாத கஜானான ஞானகணேச நின் 
நன்மலர் அடி போற்றி

தேனார் கொன்றையும் தீம்புனல் மத்தமும்
                               திங்களொடு சூடி
கானாமுதத்தொடு கருத்தே உருகுவார்
அன்புளத்தே யகலான்
ஞானானந்தபுரி ஞானானந்தகிரி
நல்லருள் கூட்டிடலால்
வானாடளித்துடன் தானாய் நிறுத்துவன்
வண்மலர்த் தாள் நிழலே.

அலகொடு மெழுகிட்டு அன்பினால் நறும்புகை
ஆனெய் விளக்கேற்றி
மலர்த்தொடுத் தளித்திடுவார் மனத்தகலாத
வள்ளல் வார்சடையான்
அலகிலா அருள் ஞானானந்த தபோவன
ஞானபுரீச்சுரனார்
மலமறுத்திணையடி மற்றீண்டு வாரா
வகைமுத்தி வழங்குவனே.

மாவடிக் காஞ்சியோ மாகமாந் தில்லையோ
மற்றருணாசலமோ
தேவன் ஆனைக்காவோ திகழ்தரு காளத்தி
திரியாது நெஞ்சே நீ வா
மூவடி கேட்டன்று முழுதுலகளந்தானும்
முந்து வீரட்டனமர்
கோவலூர் மாநகர் குறுகு ஞானானந்த
ஞானபுரீச்சுரமே

பெண்ணமர் பாகத்தன் பெண்ணை நதிக்கரை
பேசு ஞானானந்தரோடு
உண்ணிறை அன்பர்கட்கருள் செய நிற்கையில்
உறுதுயர் ஏன் உனக்கே

பண்ணிறை பாடலும் பக்தியும் உள்ளத்துப்
பற்றரும் பாங்குடனே
கண்ணிறை கர்த்தனைக் காண நீ நன்னெஞ்சே
கடுகு தபோவனமே

ஞானகணேசனும் ஞான தண்டாயுதன்
ஞானாம்பிகையோடு
தேனமர் மாவின்கீழ் கிரி ஞானானந்தரின்
திருவடி நீங்காதா
தான நற்சிந்தையால் சார்ந்திடு நெஞ்சமே
தன்னிகரில்லாமை
ஆன நற்பதமுனக்களித்தருள்வானுயர்
ஞான புரீச்சுரனே

அந்தகாசுரன்றன்னை யடர்த்த வீரட்டனும்
அமுதருள் கோவலனும்
முந்துற எழுந்தருள் முதுநகர் கோவல்சார்
மூதறிவாளர் நிறை
எந்தை ஞானானந்த எழிற்குரு அருளென்ன
இன்னிழற் சோலைவளர்
வந்தவர் வினைபோக்கும் ஞான புரீச்சுரன்
மலரடி சார்நெஞ்சமே

உடற்பிணி மட்டுமோ உளப்பிணியுந்தீர்த்து
ஓதரு வீடெய்தவே
மடத்தகை நீக்கிநன் மலரடி காட்டுமோர்
வள்ளல் ஞானானந்தர் சே
இடத்தமர் ஞானபுரீச்சுரன் மலரடி
இன் தமிழாற்பாடி
கிடத்தி நன் நெஞ்சமே கேளினிப் பிறவாமை
கிட்டுமோர் அட்டியின்றே

காமக் குரோதமே லோபமே மோகமே
காண் மதமாற்சர்யமே
தாமணுகா வகை தண்ணருளால் நமைத்
தகுதியால் ஆட்கொள்ளுவான்
பாமரராயினும் பண்பினராயினும்
பகர் அறிவுரை சாற்றும்
நாம ஞானானந்த கிரியுடன் அமர்தரு
ஞானபுரீச்சுரனே

தன்கடைக்கண்ணினால் தாயென அறிவுரை
சாற்று தந்தையும் போலே
மண்ணிடை மானினால் மான் பிடிப்பார் போல
வந்தருள் ஸத்குருவாய்
விண்ணவர் சிவரத்னகிரி திருவடி நீங்கா
மேன்மை ஞானானந்தர் பால்
கண்மணியொப்பவர் கருதுவார் பிணி நீக்கும்
ஞானபுரீச்சுரனே

நற்றமிழ்ப் பாப்பாடி ஞானபுரீச்சுரன்
நல்லடியுளங்கொண்டே
உற்றிடு ஞானானந்தர் தம் திருவருள்
உறுமன்பரொடுங்கூடி
பற்றிய இருவினைப் பாசமும் போயறும்
பாங்கினால் நமன்வாதை
அற்றவர் சூழிடம் ஆகுங்தபோவன
அண்ணல் தம் அடிபற்றே. 
அற்றவர் சூழிடம் ஆகுங்தென்னாங்கூர்

அண்ணல் தம் அடிபற்றே.  

ஸ்ரீஞானஸ்கந்தர் திருப்புகழ்

ஸ்ரீஞானஸ்கந்தர் திருப்புகழ்

மாணா உடலினை மாண்பின தென நிதம்
மயங்கிவீழ் பவக்கடல் – மலமூழ்கி
வானாரரும்பொருள் வண்டமிழ்ச் சந்தத்தால்
வாழ்வுற இசைக்கிலேன் - மயலோடே

தேனார் மொழியினார் திருவெனப் புவியெனத்
தினந்தினம் கிடந்தலை – சிறு நாயேன்
தீநாய் வழிகெடுத் திருளற வொளிகொடுத்
திந்திரியம் அடக்கிய – பரமேலாம்

காணா ஒருபொருள் கானரு முயற்சியைக்
கைக்கொள அருள்வதும் – ஒருநாளே
கல்லால் நிழல்மலை வில்லார் அருளிய
காங்கேயனே – திருமுருகோனே

நாணாள் உய அருள் ஞானானந்தர் உறை
ஞானானந்தபுரி யுறைவோனே
ஞானாமுதந்தரு ஞானாதிபசிவ
ஞானாதித குக பெருமானே

ஞானாமுதந்தரு ஞானாதிபசிவ
ஞானாதித குக பெருமானே

ஸ்ரீஞானவிநாயகர் திருப்புகழ்

ஸ்ரீஞானவிநாயகர் திருப்புகழ்

கான மலர்த் தூய்                அடிபாடக்
கயிலைசெலுத்தும்                கருணாளா
வானமுதஞ்சேர்                        தரயீயும்
மாலவன் அவன் தன்               மருகோனே
தேனலர்கொன்றையன்          முதுசேயே
சேவற்பதாகையன்                தமையோனே
ஞானகிரீசன்றன்                     கானம்வாழ்
ஞானகணேசப்                     பெருமானே.

ஞானகிரீசன்றன்                     கானம்வாழ்
ஞானகணேசப்                     பெருமானே.

Thursday, October 26, 2017

சகல கலா வல்லி மாலை

குமரகுருபரருக்கு வேண்டிய கலைகளை அருளிய சகலகலாவல்லி மாலையின், 'வெண்டா மரைக்கன்றி...’ என்ற முதல் பாடலில் துவங்கி... 'மண்கண்ட வெண்குடைக் கீழாக’ வரையிலான பத்துப் பாடல்களையும் பாடி, சரஸ்வதிதேவியை மனதார வழிபட்டுவர, பிள்ளைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது திண்ணம்.

அனைத்துப் பாடல்களையும் பாடி வழிபட இயலாதபட்சத்தில், பத்தாவது பாடலை மட்டுமாவது தினமும் பாராயணம் செய்து கலைமகளை துதியுங்கள். அவள் அருளால் அனைத்து ஞானமும் ஸித்திக்கும்!

Read more: http://www.penmai.com/forums/mantras/20030-sakalakalavalli-maalai-lyrics.html#ixzz2CxGy7Jnj

Read more: http://www.penmai.com/forums/mantras
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

Read more: http://www.penmai.com/forums/mantras/20030-sakalakalavalli-maalai-lyrics.html#ixzz2CxH9S2MS

1. வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாது கொலோ? சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக, உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே! சகல கலாவல்லியே! 2. நாடும் பொருள்சுவை சொற்சுவை தோய்தர, நாற்கவியும் பாடும் பணியில் பணித்து அருள்வாய்; பங்கய ஆசனத்தில் கூடும் பசும்பொன் கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே! சகல கலாவல்லியே! 3. அளிக்கும் செந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து, உன் அருள் கடலில் குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ? உளம் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு, களிக்கும் கலாப மயிலே! சகல கலாவல்லியே! 4. தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும், சொல்சுவை தோய் வாக்கும், பெருகப் பணித்து அருள்வாய்; வட நூற்கடலும், தேக்கும், செந்தமிழ்ச் செல்வமும், தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே! சகல கலாவல்லியே! 5. பஞ்சு அப்பி இதம்தரு செய்யபொன் பாத பங்கேருகம் என் நெஞ்சத் தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந் நாவும், அகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசு! ஒத்து இருந்தாய்; சகல கலாவல்லியே! 6. பண்ணும், பரதமும், கல்வியும் தீஞ்சொல் பனுவலும், யான் எண்ணும் பொழுதுஎளிது எய்த நல்காய்; எழுதா மறையும், விண்ணும், புவியும், புனலும், கனலும், கருத்தும் நிறைந்தாய்; சகல கலாவல்லியே! 7. பாட்டும், பொருளும், பொருளால் பொருந்தும் பயனும், என்பதால் கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய்; உளம் கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் காட்டும்வெள் ஓதிமப் பேடே சகல கலாவல்லியே! 8. சொல்விற்பனமும், அவதானமும், கவி சொல்லவல்ல நல்வித்தையும், தந்து அடிமைகொள்வாய், நளின ஆசனம்சேர் செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும் கல்விப் பெருஞ்செல்வப் பேறே! சகல கலாவல்லியே! 9. சொற்கும் பொருட்கும் உயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றம் என்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம் தோய் புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோடு அரச அன்னம் நாண, நடை கற்கும் பதாம்புயத் தாயே! சகல கலாவல்லியே! 10. மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என் பண்கண்ட அளவில் பணிரச் செய்வாய்; படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடி உண்டேனும் விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ? சகல கலாவல்லியே!

சகலகலாவல்லி மாலை
கட்டளைக் கலித்துறை
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10

Read more: http://www.penmai.com/forums/mantras/20030-sakalakalavalli-maalai-lyrics.html#ixzz2CxGRk0pJ

Wednesday, October 18, 2017

thaamirabharani days for special bath and ghat

Thamirabharani 
வந்தே மாதரம்.! தாம்ரபர்ணி 12 மாதங்களும் ஸ்நான விசேஷ நாளும் தீர்த்தம்,இடம்,பலனும்.
சித்திரை – மாதம் முழுதும் இந்திரகீலதீர்த்தம் பாபநாசம் ராஜசூயயாகபலன்
வைகாசி – த்வாதசி அல்லது ச்ரவண த்வாதசி கஜேந்திரமோக்ஷதீர்த்தம் அத்தாழநல்லூர் ஆயிரம் சாந்திராயண பலன்
ஆனி – சுக்லபக்ஷத்வாதசி ஸோமதீர்த்தம் கூனியூர் பராகக்ருச்ரபலன்
ஆடி – அமாவாஸ்யை பாணதீர்த்தம் கலம்பகர்த்தம் ஸோமயாகபலன்
ஆவணி – மாதம் முழுதும்,பௌர்ணமி க்ஷிப்தபுஷ்பதீர்த்தம் சிந்துபூந்துறை ஸர்வக்ரது பலன்
புரட்டாசி – சுக்லபக்ஷ ச்ரவணத்வாதசி கலசதீர்த்தம் ஸ்ரீவைகுண்டம் ஆயிரம்வாஜபேயயாகபலன்
ஐப்பசி – சுக்லபக்ஷம் துர்காதீர்த்தம் காருகுறிச்சி ஸர்வக்ரதுபலன்
கார்த்திகை – பௌர்ணமி தாம்ராசங்கமம் ஆற்றூர் அருகில்  ஆயிரம்கோதான பலன்
மார்கழி – மாதம் முழுதும் வ்யாஸதீர்த்தம் சேரன்மகாதேவி வேதபாராயணபலன்
மார்கழி – வ்யதீபாதம் வ்யாஸதீர்த்தம் சேரன்மகாதேவி பரமபதம்
மார்கழி – சுக்லத்வாதசி ரமாதீர்த்தம் ஆழ்வார்திருநகரி கோடிகாராம்பசுதானபலன்
மார்கழி – சுக்லத்வாதசி போகதீர்த்தம் ஆழ்வார்திருநகரி கோடிகாராம்பசுதானபலன்
மார்கழி – சுக்லத்வாதசி சக்ரதீர்த்தம்  ஆழ்வார்திருநகரி கோடிகாராம்பசுதானபலன்
தை – சுக்லபக்ஷ்ம் மகரதீர்த்தம் ஆழ்வார்திருநகரி கிழக்கில் நூறுகன்னிகாதான பலன்
தை – பௌர்ணமி புடார்ஜனம் திருப்புடைமருதூர் பரமபதம்
மாசி – த்வாதசி சக்ரதீர்த்தம் ஆழ்வார்திருநகரி ஆயிரம் பிராமணகுடும்பப்ப்ரதிஷ்டை பலன்
மாசி – சிவராத்ரி ஸோமதீர்த்தம் ஆற்றூர் கோடிகாராம்பசுதான பலன்
மாசி – சுக்லஏகாதசி விஷ்ணுதீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்
மாசி – சுக்லத்வாதசி கோதீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்
மாசி – சுக்லத்வாதசி குசஸ்தம்ப தீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்
மாசி – சுக்லத்வாதசி ம்ருத்யுஞ்ஜய தீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்  
மாசி – சுக்லத்வாதசி தைத்திரீய தீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்   
மாசி – சுக்லத்வாதசி ராஜசூய தீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்       
மாசி – சுக்லத்வாதசி மகாவிரத தீர்த்தம் சீவலப்பேரி மகாவிரதபலன்

பங்குனி – அமாவாசை சியாமாநதி சங்கமம் செவல் அருகில் ஸகலபாபநிவர்த்தி
பங்குனி – அமாவாசை மந்திரதீர்த்தம்(சியாமநதியின் கூடல்) செவல் அருகில் அன்னதான பலன்

பங்குனி – அமாவாசை கலச தீர்த்தம் ஸ்ரீவைகுண்டம் ப்ரஹ்மஹத்தி தோஷநிவர்த்தி