ஸ்ரீஞானஸ்கந்தர் திருப்புகழ்
மாணா
உடலினை மாண்பின தென நிதம்
மயங்கிவீழ்
பவக்கடல் – மலமூழ்கி
வானாரரும்பொருள்
வண்டமிழ்ச் சந்தத்தால்
வாழ்வுற
இசைக்கிலேன் - மயலோடே
தேனார்
மொழியினார் திருவெனப் புவியெனத்
தினந்தினம்
கிடந்தலை – சிறு நாயேன்
தீநாய்
வழிகெடுத் திருளற வொளிகொடுத்
திந்திரியம்
அடக்கிய – பரமேலாம்
காணா
ஒருபொருள் கானரு முயற்சியைக்
கைக்கொள
அருள்வதும் – ஒருநாளே
கல்லால்
நிழல்மலை வில்லார் அருளிய
காங்கேயனே
– திருமுருகோனே
நாணாள்
உய அருள் ஞானானந்தர் உறை
ஞானானந்தபுரி
யுறைவோனே
ஞானாமுதந்தரு
ஞானாதிபசிவ
ஞானாதித
குக பெருமானே
ஞானாமுதந்தரு
ஞானாதிபசிவ
ஞானாதித
குக பெருமானே
No comments:
Post a Comment