ஸ்ரீகுருஜி திருப்பள்ளியெழுச்சி
சித்தர்
உறை அண்ணாமலை பக்தர் நிறை சிதம்பரம் (ஜீவன்)
முக்தர்
வாழும் காஞ்சீபுரம் சூழ்ந்த நற்க்ஷேத்திரம்
திரு
உறை தென்னாங்கூர் மேவிடும் தவத்திரு
ஸ்வாமி
ஹரிதாஸகிரியே பள்ளியெழுந்தருள்வாயே!
தானம்
தவம் சிறந்த தபோவனம் உறை
ஞானானந்தர்
எமக்களித்த
ஞானகுருதேவா
உந்தன்
நாமம்
பாடிப்பரவசமாய்
நாடிவந்தோம்
நின்வாயிலில்
ஸ்வாமி
ஹரிதாஸகிரியே பள்ளியெழுந்தருள்வாயே!
ஐங்கரன்
நல்வாணி ஆறுமுகன் அம்மை அப்பன்
நாராயணனும்
ஓர் உருவாய் வந்த குருதேவா உந்தன்
தரிசனமே
காணவேண்டி காத்து நின்றோம் நின்வாயிலில்
ஸ்வாமி
ஹரிதாஸகிரியே பள்ளியெழுந்தருள்வாயே!
தஞ்சம்
என்று வந்தவர்க்கு அஞ்சேலென்று கூறி என்றும்
நெஞ்சினிலே
நிறைந்தருள் செய் ஸத்குருதேவா உந்தன்
கஞ்சமலர்தாள்
பணிந்து உய்யவழி தேடிவந்தோம்
ஸ்வாமி
ஹரிதாஸகிரியே பள்ளியெழுந்தருள்வாயே!
No comments:
Post a Comment