Monday, March 9, 2020

ஸ்ரீஸத்குருபாத தோத்திரம்


ஸ்ரீஸத்குருபாத தோத்திரம்
அமர்ஜோதி குருபாதம் அழிவொன்றில்லாத பாதம்
அமரர்களும் அடைந்தறியா ஆனந்த குருபாதம்
பெருவாரி மதங்களெல்லாம் போற்றும் குருபாதம்
வேதாந்த ஸாரமதாய் விளங்கும் மெய் குருபாதம்

நம்பிக்கை கொண்டார்க்கென்றும் நலமருளும் குருபாதம்
நாதபிந்து கலாதிகளை போதிக்கும் குருபாதம்
நாரதாதி முனிவர்களும் நவின்று போற்றும் குருபாதம்
நரர்களுக்கும் ஸுரர்களுக்கும் நடுவான குருபாதம்

வேதம் நான்கும் புகழ்ந்திடும் மெய் போதமான குருபாதம்
வேண்டிய நாம் வேண்டியவாறு எமக்கருளும் குருபாதம்
ஆரணங்கள் யாவற்றிற்கும் ஆதாரமான பாதம்
ஹரிஹரனும் அயனும் தேடி அடைந்திடாத பாதம்

காலதேசங்கள் யாவும் கடந்து நிற்கும் குருபாதம்
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பூட்டும் குருபாதம்
எல்லார்க்கும் இடமளிக்கும் ஏகாந்த குருபாதம்
வல்லாரும் வரதனுமே வணங்கிடும் குருபாதம்.
வல்லாரும் வரதனுமே வணங்கிடும் குருபாதம்.

No comments:

Post a Comment