ஸ்ரீஸத்குரு ஞானானந்த நவரத்ன
மாலை
பெண்ணை நதியின் வடகரையில்
கண்ணைக்கவரும் சோலைதனில்
தன்னைஅடைந்தோர் உயர்ந்திடவே
தனித்தே அமர்ந்தார் ஞானனிவர்
அன்பே உருவாய்க் கொண்டவராம்
ஆலின்கீழே அமர்ந்தவராம்
அபயம் என்றே வந்தோர்க்கு
அல்லல் தீர்க்கவே வந்தவராம்
அங்கும் இங்கும் ஒரு நிலையாய்
எங்கும் நிறந்தே இருப்பவராம்
ஓடி ஓடியே அலைந்திடுவார்
உள்ளம் அசைவற்றிருந்திடுவார்
அல்லல் பட்டு அழுவோர்க்கு
அன்னையும் தந்தையும் இவராவார்
எடுப்போர்க்கெல்லாம் குழந்தை
இவர்
ஏற்றித் தொழுதால் தெய்வமிவர்
அண்ணாமலையின் அருளொளியாம்
விண்ணும் மண்ணும் அளந்தவராம்
எண்ணும் ஏகாக்ஷர போதகராம்
எங்களைக் காத்திட வந்தவராம்
நாமகள் வீணையின் நாதமிவர்
நான்மறை ஓதிடும் வேதமிவர்
நான் எனும் அகந்தை
அற்றோர்க்கு
நாயகனாம் விச்வநாதன் இவர்
கோதை போற்றிய சீலரிவர்
கீதாசார்ய மூர்த்தி இவர்
போதியினடியில் புத்தரிவர்
ஆதிசங்கர குருநாதரிவர்
உலகமாயை நீங்கிடவே
உள்ளம் தானாய்த் தெளிந்திடவே
எல்லாம் இவராய்க் கண்டிடவே
எளிதாய் நமக்கே உரைப்பவராம்
எல்லாக் கலைகளின் எல்லை இவர்
நில்லா நடமிடும் நாதனிவர்
சொல்லே அறியாச் சிறுவனிவன்
சொல்வதைக்கேட்டும் மகிழ்வாராம்
பயன்
சித்தம் ஒன்றில்
நிறுத்திவிட்டு
சிந்தனை அடக்கி ஒருமனதாய்
சீருடன் இதனைப் பாடிடுவார்
சிவரத்தினமாய்
வாழ்ந்திடுவார்.
ஓம் குருநாதா ஞானானந்தா
ஸ்ரீகுருநாதா ஞானானந்தா
ஸத்குருநாதா ஞானானந்தா
சரணம் சரணம் குருதேவா
சரணம் சரணம் குருதேவா.
No comments:
Post a Comment