Thursday, March 12, 2020

ஆஞ்ஜனேயர் கீர்த்தனங்கள்


ஆஞ்ஜனேயர் கீர்த்தனங்கள்

ராகம்: ஹிந்தோளம்                                            தாளம்: ஆதி
அன்னையின் துயர் நிக்கி அன்புருவாய் நின்ற
ஆஞ்ஜனேயரே சரணம்
வாயுகுமாரரே வானர வீரரே
ஓயாமல் ராமரை உளந்தன்னில் பூஜிப்பவரே(அன்னை)

ஸ்ரீராமதூதராகி ஆழ்கடல் தாண்டி
ஸீதையை சிறைமீட்டு சிரஞ்ஜீவியானீரே
மலைதனைக் கொணர்ந்து இளயவரைக் காத்தீரே
என் நிலை கண்டு மனமிரங்கி காத்தருள்வீரே(அன்னை)

                             …………..
ராகம்: ஆபேரி                                                    தாளம்: ஆதி
ஸஞ்ஜீவி மலையைக் கொணர்ந்தவன்
சிரஞ்ஜீவி எனும் பெயர் க்கொண்டவன் – ஹனுமன்(ஸஞ்ஜீவி)

அஞ்ஜனா தேவி மைந்தனிவன் – வாழ்வில்
சஞ்சலம் அகற்றவே பிறந்தவன் – ஹனுமன்(ஸஞ்ஜீவி)

ராமனுக்காகப் பிறந்தவன்
ரகுராமனை வாழ்விப்பதைல் சிறந்தவன் – ஹனுமன்(ஸஞ்ஜீவி)

ஞானபண்டிதனாக நின்றவன் நம்முன்
ஞானானந்தனாக நிற்பவன் – ஹனுமன் (ஸஞ்ஜீவி) 
                          ……………

ராகம்: கதன குதூகலம்                                      தாளம்: ஆதி
ஆஞ்ஜனேயம் அதி பாடலானனம்
காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம்
பாவயாமி பவமான நந்தனம்

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலில்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்
             …………………….
ராகம்: ஆரபி                              தாளம்: ஆதி
ஆஞ்ஜனேய பரமானந்த மூர்த்தே
அகணித குணகூர்த்தே
அபஹ்ருத ரகுவர பக்த ஜனார்த்தே
அவனத மா மனோரத பரிபூர்த்தே (ஆஞ்ஜனேய)

மைதிலி சோக வினாச ஸுதாகர
மாருதப்ரிய தனுஜாத்மவதாம் வர
மதபர நிசிசர லங்கா பயங்கர
மங்களகர ராமதாஸ ஹ்ருத் கோசர (ஆஞ்ஜனேய)
                         ………………………..
ராகம்: கல்யாணி                      தாளம்: ஆதி
வந்தருள்புரி வரதா வாயுகுமாரா
ஸுந்தர முடி கொண்ட தூய எழில் கோதண்ட
சந்த ராகவன் கொண்ட ஸகல ஜெய உத்தண்ட (வந்தருள்)

அஞ்ஜனையருள் பாலா அடியவர்க்கருள் சீலா
வஞ்ச ராக்ஷஸர்காலா வரந்தருள் க்ருபாலோலா(வந்தருள்)

மன்ன ராகவன் தூத மா ரமக்ருஷ்ணன் ஓத
இன்னல் தீர்த்தருள் நாதா இலகு நல்வர தாதா(வந்தருள்)
                     …………………………….



தன்ய அஞ்ஜனீச ஸுத த்யாசே நாவ ஹனுமந்த
ஜேணே ஸீதா சுத்தி கேளி ராமஸிதா பேடவிலி
த்ரோணகிரி ஜோ ஆணீலா லக்ஷுமண வாஞ்சவீலா
ஐஸா மாருதி உபகாரீ   துகா லோளே சரணாவரீ.

No comments:

Post a Comment