Monday, March 9, 2020

ஸ்ரீஸரஸ்வதி துதி


ஸ்ரீஸரஸ்வதி துதி
நான்முகன் நாவினில் நடமாடும் தேவியே ஸரஸ்வதியே
                                                                          வாணி - நாங்கள்
நயந்துன்னைப் போற்றியே நமஸ்கரித்தோம் அன்னை வேத புஸ்தக பாணி
கலைகள் எல்லாம் ஒன்றாய் நிலைத்திருக்கும் எங்கள் கலையரசி ராணி – யாமும்
தலை வணங்கியே தாள் பணிந்தோம் எங்கள் தாயே – வீணாபாணி

காயத்ரி ஸாவித்ரி ஸந்த்யா ஸரஸ்வதி சரணடைந்தோம் தாயே – எங்கள்
வாக்கில் வந்தே அருள்தாக்கி உள்நாக்கினில் உறைந்திடுவாய் நீயே
வித்தைக்கெல்லாம் ஆதி வித்தையாகி நின்ற வேத கலை ஸரஸ்வதி – இன்று
வித்வான்கள் என விளங்குவோர் நாவினில் துலங்கும் கலாநிதி
வேதாகமங்களுக்கு ஆதாரமாம் உயர் சாரதாமணி தேவி எங்கள் நாரதாதி
ஞான ஸனக ஸனந்தாதி முனிவோர்களின் ஜனனி
வெந்தாமரையின் மேல் வீற்றிருக்கும் மஹா மேதை கலாவாணி – தூய
வெண்ணிற ஆடை அணிந்திருக்கும் வீணா ஞான கலாலோலினி
அன்பே உருவாகி அன்னத்தின் மீதேறி ஆளவந்தாய் தேவி – கவி
வன்மையாய் பாடி உன் ஆசிகள் வேண்டி அழைத்தோம் உனைக்கூவி
மலைமகள் அலைமகள் கலைமகள் ஆகி நீ மாறி நின்ற தேவி – அன்று
வரதனின் உந்தியில் பிறந்திட்ட ப்ரஹ்மனின் ஆசைக்குகந்த தேவி

அன்று
வரதனின் உந்தியில் பிறந்திட்ட ப்ரஹ்மனின் ஆசைக்குகந்த தேவி .

No comments:

Post a Comment