Monday, March 9, 2020

ஞானானந்த போற்றி


ஞானானந்த போற்றி
ஸத்திய ஞானானந்த சொரூபம் போற்றி! போற்றி!
ஸகல பரிபூரணமாம் சொரூபம் போற்றி! போற்றி!
நித்திய ஞானானந்த சொரூபம் போற்றி! போற்றி!
நிரஞ்சன நிர்குணமான சொரூபம் போற்றி! போற்றி!
இந்துவித லேசமிலாச் சொரூபம் போற்றி! போற்றி!
ஏக சிதாகர்யபர சொரூபம் போற்றி! போற்றி!
அத்துவித மானபர சொரூபம் போற்றி! போற்றி!
அகண்டமதாம் பர சொரூபம் போற்றி! போற்றி!

சங்கரன் மரபில் வந்த ஸத்குரு தேவா போற்றி!
ஐங்கரன் முதலாம் தெய்வ அருள் நிதிக்குவையே போற்றி!
அன்பினால் ஆட்சி செய்யும் அருந்துறவரசே போற்றி!
அம்பிகையுருவில் வந்து அருள் தரும் அண்ணலே போற்றி!

ஆருயிர்க்கன்னாய் போற்றி! அலந்தவர்க்கப்பா போற்றி!
பூரணப்பொருளே போற்றி! கருணைமாக்கடலே போற்றி!
எம் குலத்திருவே போற்றி! கற்பகத்தருவே போற்றி!
தஞ்சமென்றடைந்தோர் தங்கள் சஞ்சலம் தீர்த்தாய் போற்றி!

ஆடிய பாதம் போற்றி! அருள் நடத்தரசே போற்றி!
வாடிய முகங்கள் உன்னைப் பாடிட வைத்தாய் போற்றி!
ஞானமாம் சுடரே போற்றி! மோன மெய்ப்பொருளே போற்றி!
தீனரைக்காக்க வந்த தெய்வமே போற்றி! போற்றி!

பக்தர் தம் பதியே போற்றி! முக்தர் தம் முதல்வா போற்றி!
பாவியேன் என்னை வந்து வலிய ஆட்கொண்டாய் போற்றி!
பவப்பிணி தீர்க்கும் வைத்யநாதனே போற்றி! போற்றி!
தபோவனத்தமர்ந்த ஞானானந்த ஸத்குருவே போற்றி!



கற்பனை கடந்த உன்னைக் கருணையாம் உருவில் கண்ட
அற்பனென் சொல்லணிந்த தற்பரா போற்றி! போற்றி!
தபோவனத்தமர்ந்த ஞானானந்த ஸத்குருவே போற்றி! போற்றி!

No comments:

Post a Comment