முருகன் துதி
ஆறிரு தடந்தோள் வாழ்க,
ஆறுமுகம் வாழ்க, வெற்பைக்
கூறு செய் தனிவேல் வாழ்க,
குக்குடம் வாழ்க, செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க, யானை தன்
அணங்கு வாழ்க,
மாறிலா வள்ளி வாழ்க, வாழ்க
சீரடியார் எல்லாம்.
மூவிரு முகங்கள் போற்றி முகம்
பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு
தோள்கள் போற்றி – காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள் மலரடி
போற்றி! அன்னார்
சேவலும் மயிலும் போற்றி!
திருக்கைவேல் போற்றி! போற்றி!
No comments:
Post a Comment