ஸ்ரீஆதிபராசக்தி
அகணிததாரா கணங்களின் நடுவே
ஆதிபராசக்தி ஆடுகின்றாள்
ஸகல சராசரத்தும் தங்கச்
சிலம்பொலிக்க
ஜகதீச்வரியவள் ஆடுகின்றாள் - அவள்
ஜகதீச்வரியவள் ஆடுகின்றாள்
அயனென வருவாள் அனைத்தையும் படைப்பாள்
ஹரியென அளிப்பாள் அரனென
அழிப்பாள்
அழிவிலிருந்தும் ஜீவன்
பிறந்திடச் செய்பவளாம்
அகிலாண்டேச்வரி ஆடுகின்றாள் - அவள்
அகிலாண்டேச்வரி ஆடுகின்றாள்
அகிலமுழுதும் உள்ள ஆருயிரினங்களும்
ஆழப்பெருங்கடலில்
வாழுயிரினங்களும்
அன்றன்று உணவு கொள்ள
அத்தனைக்கும் தந்தருளி
அன்னபூர்ணேச்வரி ஆடுகின்றாள் - அவள்
அன்னபூர்ணேச்வரி ஆடுகின்றாள்
கனக கமலந்தன்னில் கனிந்த
சிவப்பொருளைக்
கலந்து பேரின்பங்காட்டும்
கனல் வடிவானவளாம்
நானற்ற நல்லோர்க்கெல்லாம்
நான் இதோ என்று தோன்றும்
ஞானபரமேச்வரி ஆடுகின்றாள் - அவள்
ஞானபரமேச்வரி ஆடுகின்றாள்
இதயவீணை எழும் இன்னிசையவளே
இருளை அகற்றும் தீப ஜோதியும்
அவளே
நாற்பத்து மூன்று கோண நாத
மணிமண்டபத்தில்
ஸ்ரீலலிதேச்வரி ஆடுகின்றாள் - அவள்
ஸ்ரீஷோடஸாக்ஷரீ ஆடுகின்றாள்
அழைக்குமுன் வருவாள்
அடைக்கலம் அளிப்பாள்
அன்பினுக்குட்படுவாள் அனந்த
கல்யாணியவள்
அருட்கவிமாலை பாடும் அகத்தியன்
அகத்திலே
அமுத சந்திரேச்வரி
ஆடுகின்றாள் – அவள்
ஆனந்த நாடகம் ஆடுகின்றாள் –
அவள்
அகஸ்த்யஸித்தேச்வரி
ஆடுகின்றாள்.
அகணிததாரா கணங்களின் நடுவே
ஆதிபராசக்தி ஆடுகின்றாள் – அவள்
ஆனந்த நாடகம் ஆடுகின்றாள்.
No comments:
Post a Comment