ஸ்ரீஅருட்குருமூர்த்தி துதி
சீர் தருகும் பரமானந்த
வடிவமாய்
சின்மயனே – ஜெகன் நாதா
சிந்தை அடங்கிட சிவபதம்
அளித்தருள்
தேசிகனே – குருநாதா
என்றும் இல்லா உலகை ஏன்
எனக்குக் காட்டியே
ஏங்க வைத்தாய் – ஜெகன்நாதா
நான் அன்றி வேறில்லா தானாகி
நின்றிட
நலமெனக்கருள் – குருநாதா
காரணனாய் நின்று கஷ்டஸுகம்
தந்து
கலங்கவிட்டாய் – ஜெகன்நாதா
பூரணனாய் உன்னில் கலந்திடச்
செய்
பரிபூரணனே – குருநாதா
அந்தகன் போல் யானும்
அலைந்தலைந்தும்
உன்னை அடைந்தறியேன் –
ஜெகன்நாதா
பந்த பாசங்கள் அற்று பரமாய்
நிறந்திடச் செய்
பராபரனே – குருநாதா
தில்லை சிதம்பராம்
எல்லையில்லா வெளியில்
நில்லா நடம் புரியும் – பாதா
சொல்லாமல் சொல்லி என்னை
சொரூபத்தில்
சேர்த்து வை சேதனனே –
குருநாதா
மாயை என்ற பேயை மதித்திடச்
செய்தென்னை
மயங்க விட்டாய் – ஜெகன்நாதா
பாயும் சுவாஸம் எல்லாம்
பரத்துடன் சேரச் செய்
பரமேச்வரனே – குருநாதா
மதிமயமாய் என்னில் சதிகள் பல
செய்யும்
சாச்வதனே – ஜெகன்நாதா
பசு பதி பாசம் என்ற திரைகள்
அறுக்கச் செய்
பசுபதியே – குருநாதா
மான்மழுவேந்தியே மாநிலம்
காத்து நின்ற
மஹேச்வரனே – விச்வநாதா
நான் என்ற அகந்தை விட்டு
தானாகி நின்றிடச் செய்
தாண்டவனே – குருநாதா
அண்டபுவனமெல்லாம் ஆண்டருள்
செய்யுமென்
ஆண்டவனே – ஜெகன்நாதா
கொண்டல் போன்ற மும்மலங்களை
நீக்கச்செய்
சண்டமாருத – குருநாதா
ஜீவேச்வர ஜகத்தாய் இஹபரம்
இரண்டுமாய்
ஏகனாய் நின்ற – ஜெகன்நாதா
ஜீவப்ரஹ்மைக்ய ரகசியம்
தெளியச்செய்
ஜீவ பண்டிதனே – குருநாதா
பூதம் ஐந்தால் ஆன கோசங்கள்
ஐந்தினுள்
ஜோதியாய் நின்ற – ஜெகன்நாதா
ஸாதகத்தால் பஞ்ச கோசங்கள்
அறுத்துன்னை
சந்திக்கச் செய் – குருநாதா
பொறிபுலன்கள் தந்து பேரறிவைக்
குறைத்து
பேயனாக்கி வைத்தாய் – நாதா
அறிதற்கு அரிதாகும் ஆறாம்
அறிவைத் தந்து
ஆதரித்தருள் – குருநாதா
கண்ணுக்கு கண்ணாய் கண்ணின்றி
காணும் உன்னை
காண்பது எங்கண் – ஜெகன்நாதா
காந்தம் இரும்பு போல்
கவர்ந்தென்னை விடாமல்
கலந்திடுவாய் – குருநாதா
கெஞ்சியும் கொஞ்சமும்
நெஞ்சமிரங்கலையோ
அஞ்சாதே என்றருள் – ஜெகன்நாதா
வஞ்சனையால் வந்த ஸஞ்சிதம்
போக்கிவை
குஞ்சிதனே – குருநாதா
அகமதில் நீ இல்லையோ அகந்தை
ஏன் வளர்த்திட்டாய்
அச்சுதனே – ஜெகன்நாதா
சுகக்கடல் பொங்கிட
சொல்லுணர்வடங்கிட
சுயம்பு ஆக்கிவை –குருநாதா
துப்பறிவில்லாத இப்பிறப்பெனக்
கீய்ந்த
ஒப்புயர்வற்ற – ஜெகன்நாதா
ராப்பகல் இல்லாத வெட்ட
வெளியில் என்னை
ரமித்திடச் செய் – குருநாதா
ஈன்றிடும் அன்னையிற்
பெரிதருள் புரிவோய்
இதுவோ உனதருள் – நாதா
மேன்மேலும் ஆசையை மேவிடச்
செய்யாதுன்
தன்மை எனக்கருள் – குருநாதா
வரும் பிறவிகள் மாற்றி தரும்
கர்மங்களைப் போக்கி
பெரும் பதம் எனக்கருள் – நாதா
அருட்பெரும் ஜோதியாய்
அமர்ந்திடச் செய்
என் குருபரனே – ஞானவரதா.
அருட்பெரும் ஜோதியாய்
அமர்ந்திடச் செய்
என் குருபரனே – ஞானவரதா.
No comments:
Post a Comment