Thursday, March 12, 2020

திருப்புகழ்


திருப்புகழ்

நாதபிந்து கலாதி நமோ நம
வேதமந்த்ர ஸ்வரூபா நமோ நம
ஞான பண்டித ஸ்வாமி நமோ நம – வெகுகோடி

நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூரா நமோ நம – பரசூரர்

சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிங்கிணி பாதா நமோ நம
தீர சம்ப்ரம வீரா நமோ நம – கிரிராஜ

தீபமங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம – அருள்தாராய்

ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலுங்குண ஆசார நீதியும்
ஈரமுங் குரு சீர்பாத சேவையும் – மறவாத

ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜகம்பீர நாடாளு நாயக – வயலூர

ஆதரம் பயிலாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முன்னாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயி – லையிலேகி
ஆதியந்த வுலாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் – பெருமாளே

தீபமங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம – அருள்தாராய்
        வினைதீராய்.

No comments:

Post a Comment