Thursday, March 12, 2020

ஈஸ்வரன் துதி


ஈஸ்வரன் துதி

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க, வையகமும் துயர் தீர்கவே

விமலமதாய் வேறற்ற வகண்டாகார
விருத்தியினில் விளங்கிய ஸத்குருவே போற்றி!
அமலமதாயகண்ட பர வித்தையாகி
அவித்தையெல்லாம் நீக்கிய ஸத்குருவே போற்றி!

நிமலமதாம் வித்தைக்கும் அப்பாலாகி
நிச்சலமாய் நின்ற பரமகுருவே போற்றி!
ஸமமதுவாய் சற்றுமொரு சங்கமின்றிச்
சன்மார்க்கமான ஸத்குருவே போற்றி! போற்றி!.

No comments:

Post a Comment