ஸ்ரீநாமாஜி
திருப்பள்ளியெழுச்சி
பள்ளி எழுந்தருள்வாய்
குருநாதா – எங்கள்
பிறவிப்பிணி தீர பரமன் அடிகாண
பள்ளி எழுந்தருள்வாய்
குருநாதா – எங்கள்
பிறவிப்பிணி தீர பரமன் அடிகாண
ப்ரஹ்மமாய் விளங்கும்
பரஞ்ஜோதியே – எங்கள்
வினைகளைப் போக்கிடுவாய்
அருட்ஜோதியே
அஞ்ஞானத்திரை அகற்றி ஆன்மலயம்
தரவே
தரணியம்பதியே நீ
எழுந்தருள்வாயே!
பவக்கடலில் வீழ்ந்து
வாடிநிற்கும் எங்களைத்
தடுத்தாட்கொண்டருள வந்தவனே –
உந்தன்
திருவடி நிழலையே பற்றி
நிற்கும் – எங்களை
உய்வித்தருளவே
எழுந்தருள்வாயே!
அகந்தையினால் நாங்கள்
மதியிழந்தே உலகில்
அல்லும் பகலும் அல்லலுற்றோம்
– ஞான
விந்தைபுரிந்து சிந்தை
தெளியப்பெற
தயையுடனே பள்ளி
எழுந்தருள்வாயே!
நாமமே கதியென்று உரைத்திட்டவா
– எங்கள்
கலியை நீக்கும் வழிக்கு
வித்திட்டவா
ஞான ஸ்வரூபனே (ஸ்வாமி)நாமானந்தா
உந்தன்
த்யானம் நீக்கியே பள்ளி
எழுந்தருள்வாயே!
No comments:
Post a Comment