Monday, July 6, 2020

பிள்ளை பெற்றாள் மருந்து


பிள்ளை பெற்றாள் மருந்து

16 மூலிகைகள்
மஞ்சள் சிறியது -2,
நறுக்கு மூலம் – 500 கிராம்,
திப்பிலி – 200 கிராம்,
வாயுவிளங்கம் – 200 கிராம்,
சுக்கு – 250 கிராம்,
ஓமம் – 100 கிராம்,
அக்கரா – 100 கிராம்,
சித்தரத்தை – 100 கிராம்,
ஜாதிக்காய் – 2,
ஜாதிபத்திரி – 25 கிராம்,
கொத்தமல்லி விதை – 100 கிராம்,
கசகசா – 100 கிராம்,
மிளகு – 250 கிராம்,
அதிமதுரம் – 100 கிராம்,
அதிவதயம் – 50 கிராம்,
ஜீரகம் – 100 கிராம்
எல்லாவற்றையும்
நருக்குமூலம்,சுக்கு,அதிமதுரம்,அதிவதயம்,மஞ்சள் இதெல்லாம் தட்டிவிட்டு இடிக்கவேண்டும்.
எல்லாவற்றையும் வெயிலில் காய வைத்து வறுத்து பொடி செய்து மொத்தமாக க் கலந்து வைக்கவும்.
கொஞ்சகொஞ்சமாக 100கிராம் – கருப்பட்டி,
4 ஸ்பூன் பொடி,4ஸ்பூன் நெய்,4 ஸ்பூன் நல்லெண்ணெய், தேன் சேர்த்து
கருப்பட்டியை தண்ணீரில் போட்டு கரைத்து வடிகட்டவும்.
வடிகட்டிய கருப்பட்டி தண்ணீரில் கொதிக்க வைத்து கொதிக்கும்போது 4 ஸ்பூன் பொடியை போடவும்.
கிளறி விட்டு தேன் விட்டு கெட்டியாக வரும்போது 4ஸ்பூன் நெய், 4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கிண்டி எடுத்து வைக்கவேண்டும்.
கெட்டியாக உருண்டையாக லேகிய பதம்.
வைக்கவேண்டும்.

இப்படியில்லையெனில்,
பாதியளவு வாங்கிக்கொண்டு இஞ்சிச்சாறு ( 200 கிராம் இஞ்சி வாங்கி தோல் சீவி அரைத்து) எடுத்து, கருப்பட்டி 1 ½ கிலோ, நெய் – 200 கிராம்.
கருப்பட்டி தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொதிக்கும்போது இஞ்சிச்சாறு விட்டு பொடி எல்லாம் போட்டு கிளறும்போது கெட்டியாகும்போது தேன்,நெய்,நல்லெண்ணெய் விட்டு கிளறி வைக்கவேண்டும்.

No comments:

Post a Comment