Saturday, December 10, 2011

சமச்சீர் கல்வி

சென்னையில் மேற்கு மாம்பலத்தில் சக்கரபாணித் தெருவில் அமைந்துள்ள கலா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ள உள்ளது.
காரணங்கள் தமிழக அரசு, மற்றும் அரசியல் வாதிகளின் தேவை இல்லாத செயல் பாடுகள்.
தமிழக அரசு தனது போக்குவரத்துக் கழகம், ஆவின், மின்சாரவாரியம் இவற்றின் தேவை மக்களுக்குத் தொடர்ந்து கிடைக்க விலைகளை உயர்த்தி உள்ளது போலவே, பள்ளிகளும் நியாயமான அளவு கட்டணங்கள் வசூலிக்க அனுமதிக்க வேண்டும். சிறந்த அளவில் இந்தப் பகுதியில் கல்விக்காக 26 வருடங்களாக சேவை புரிந்து வரும் ஒரு அறக் கட்டளை இது.
ராமகிருஷ்ண மிஷனின் பள்ளியை விட குறைந்த கட்டணம் வாங்கும் பள்ளி இது.
ஆனாலும் தமிழக அரசு தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரே அளவாக கட்டணங்கள் பெறச் சொன்னால் எவ்வாறு பள்ளியின் மற்ற செலவுகளை சமாளிப்பது?
அரசாங்கம் வெறும் கண்துடைப்பாக காரியங்களை செய்யக் கூடாது.

Thursday, December 8, 2011

விலைவாசி

விலைவாசி உயர்வை மட்டுமே பேசுகின்ற அனைவருமே அரசு குறிப்பாக மத்திய அரசு உலகம் முழுவதும் பதுக்கி வைக்கப் பட்டுள்ள இந்தியர்களின் பணத்தை திரும்பக் கொண்டு வர எந்த முயற்சியும் செய்யவில்லை.
ஒரு நண்பரிடம் வெளிநாட்டு நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் அனுமதிப்பதைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கும்போது இந்தியாவில் ஏற்பட்ட வெண்மைப் புரட்சி, பசுமை புரட்சிகளைப் பற்றி குறிப்பிட்டார். அரசாங்கங்கள் விவசாயிகளுக்கு சரியான பாதுகாப்பு அளிக்க வேண்டும். விவசாயிகளின் பொருள்களுக்கு சரியான விலை கிடைக்க செய்ய வேண்டும்.
அவர்களின் விளை பொருள்கள் வீணாகாமல் தடுக்க வேண்டும்.

Friday, September 30, 2011

பூமி பூஜை

பூமி பூஜை.
http://www.scribd.com/doc/66947791

வாஸ்து பூஜை

வாஸ்து பூஜை.
http://www.scribd.com/doc/66947538

Sunday, September 25, 2011

சண்டிகா பூஜை

சரத் நவராத்திரி காலம் மிகவும் விசேஷமாக அன்னையின் அருள் பெற சிறந்த காலம். எல்லாம் வல்ல சத்குரு எப்போதும் துணை நிற்க.
http://www.scribd.com/doc/66257707

Friday, September 23, 2011

யதி தர்மம்

சத்குரு சரியான வழிகாட்டுதல் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.
எப்போதும் சத்குருவின் சரணங்களையே மனதில் நிறுத்துவோம்.
http://www.scribd.com/doc/66128432

ஸ்ரீ சக்ர ந்யாசம்

எல்லாம் வல்ல சத்குருவின் திருவருள் அனைவரையும் வழி நடத்தப் பிரார்த்திக்கிறோம்.
http://www.scribd.com/doc/66128166

Monday, September 19, 2011

சக்ர பாராயணம்

ஸ்ரீ சக்ர பாராயணம்
http://www.scribd.com/doc/65599942

சிவ பூஜை

சிவ பூஜை
http://www.scribd.com/doc/65511809

சாக்த டைரி oct 18, 2011 to Jan 14, 2012

சாக்த டைரி
http://www.scribd.com/doc/65510119

காதம்பரி பலி

காதம்பரி பலி.
http://www.scribd.com/doc/65492543

Wednesday, August 31, 2011

அரசு

எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் சமீபத்தில் குற்றாலம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த கருணாநிதியின் ஆட்சிக் காலத்தின் நானும் என் நண்பரும் காஞ்சிபுரம் சென்று இருந்தோம். அப்போது கழிவறையை உபயோகிக்க 4 ரூபாய்கள் கட்டணமாக கேட்டார்கள். அது மட்டுமல்ல கழிவறைகள் சரியான பராமரிப்புகள் இல்லாமலேயே இருந்தன. அதைப் போலவே தற்பொழுதும் குற்றாலத்தில் கழிவறையை உபயோகிக்க 5 ரூபாய்கள் கேட்டார்கள். என்னமோ எதற்கு எடுத்தாலும் விலை வாசி ஏறி விட்டது என்பதாக நாம் சொல்லுகிறோம். ஆனால் கழிவறையை சரியாக பராமரிக்காமலேயே அதற்கு கட்டணம் வசூலிப்பது என்ன நியாயம். அரசு சிந்திக்குமா?

Friday, August 26, 2011

அரசு

தற்போதைய தமிழக அரசின் பல நடவடிக்கைகளை வரவேற்கிறோம். ஆனால் மிக முக்கியமாக சென்னை பெருமைப் படும் விதமாக இல்லை. சாலைகள் அனைத்துமே குண்டும் குழியுமாக உள்ளன. இதை சரி செய்ய நடவடிக்கை உடனடித்தேவை. நன்றி.

ஹிந்து மதம்

எல்லாம் வல்ல இறைவனை நாடி ஹிந்துக்களை ஹிந்துக்களாகவே வாழ விட வேண்டி அரசிடம் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்த இந்தியர்கள் ஒன்று பட வேண்டும். உலகில் உள்ள அனைவரும் இதற்கு ஆதரவு தர வேண்டும். நன்றி.

Thursday, August 25, 2011

நன் மொழிகள்

இன்று புதிய நாள், புதிய ஒளி, புதிய காற்று. இன்று எல்லோரிடமும் அன்பாக இருப்பேன். என்னால் எதுவும் முடியும். இறைவன் என் அருகில் இருக்கிறார். இறைவன் என்னுள்ளே நிறைந்திருக்கிறார். என்னுள் மாபெரும் சக்தி குடி கொண்டிருக்கிறது. நான் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். என்னும் எண்ணங்களை பதிய விடு. அந்த நம்பிக்கையே உனக்கு வலிமை தரும்.



அனுபவத்தின் மிக முக்கியமான அம்சம் பழைய முட்டாள் தனங்களை களைவதுதான்!

ஸ்ரீஞானாநந்தரின் அருள் மொழிகள்

சுறுசுறுப்பாயிரு, ஆனால் பொறுமையாயிரு!
பொறுமையாயிரு, ஆனால் சோம்பலாயிராதே!
சிக்கனமாயிரு, ஆனால் கருமியாயிராதே!
அன்பாயிரு, ஆனால் அடிமையாயிராதே!
இரக்கங்காட்டு, ஆனால் ஏமாந்து போகாதே!
கொடையாளியாயிரு, ஆனால் ஓட்டாண்டியாய் விடாதே!
வீரனாயிரு, ஆனால் போக்கிரியாயிராதே!
இல்லறத்தை நடத்து, ஆனால் காமவெறியனாயிராதே!
பற்றற்றிரு, ஆனால் காட்டுக்கு போய்விடாதே!
நல்லோரை நாடு , ஆனால் அல்லோரை வெறுக்காதே!

Sunday, August 21, 2011

மதம்

குழந்தைகளுக்கு மதம் என்பது முக்கியமானது என்பதையும் சொல்லித் தர வேண்டும்.

Tuesday, August 9, 2011

மொழி

சம்ஸ்க்ருதம் அனைவரும் படிக்க வேண்டும்.

Sunday, May 15, 2011

அரசியல்

நன்றி! தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் சரியான நேரத்தில் எடுக்கப் பட்ட சரியான முடிவு! நன்றி!

Monday, April 18, 2011

சக்தி சுரபி

நன்றி முதலில் இங்கு வரும் அனைவருக்கும்.
http://www.vknardep.org. மேற்கண்ட வலை தளம் விவேகானந்த கேந்திரம். அங்கு சென்று மற்றும் vknardep@gmail.com என்ற முகவரிக்கும் மெயில் செய்து சக்தி சுரபி சம்பந்தமான விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். எனக்கும் தெரிவதற்காக மெயில் செய்து உள்ளேன். விவரம் தெரிந்த உடன் பதிவு செய்கிறேன். படிப்பவர்கள் தங்கள் சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்கள் குறிப்பாக கிராமங்களில் இருப்பவர்களுக்கு இதை சொன்னால் அவர்களுக்கு மிகவும் பயன் கிடைக்கும். எரிவாயுவின் விலை அதிகமாகிக் கொண்டே போகிறது.
இது அதற்கு மாற்று மேலும் பல பயன்களும் உண்டு. நன்றி

Thursday, April 7, 2011

பயனுள்ள கருத்துக்கள்

தலைப்பு பயனுள்ளதாக இருக்கிறது. இந்த பதிவில் விஷயம் ஒன்றும் இல்லை. ஆனால் நாம் இணையத்தில் எத்தனையோ விஷயங்களைப் படித்து தெரிந்து கொள்கிறோம். அதை பலரிடமும் இணையத்தை பயன் படுத்தாத ஆனால் அந்த விஷயத்தை உபயோகப் படுத்திக்கொள்ள முடிந்தவர்களிடம் பகிர்ந்து கொண்டால் நன்மை எல்லோருக்கும் கிடைக்கும். இதை சொல்லவே இந்த பதிவு!
நன்றி!

மரம் வளர்ப்பு

மதிப்பிற்குரிய பதிவர் ஓம்கார் அவர்களால் அவர்களின் பதிவில் விளக்கப் பட்டபடி மரங்கள் வளர்ப்பு பற்றி பதிவர்கள் முயற்சி செய்து விழிப்புணர்வு ஏற்பட செய்ய வேண்டும்.
தமிழகத்தில் நடந்து வரும் அரசால் சென்னையில் செம்மொழிப் பூங்கா அமைக்கப் பட்டு இருக்கிறது. இதை சமீபத்தில் சென்று காணும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்த பூங்காவில் வைப்பதற்காக சீனாவிலிருந்து போன்சாய் மரங்களை இறக்குமதி செய்து இருக்கிறார்கள். இதற்கு எத்தனை கோடி ரூபாய்கள் செலவழிக்கப் பட்டதோ தெரியவில்லை, இருக்கட்டும்.

மக்கள் தங்கள் இருப்பிடங்களில் மரங்களை வளர்த்து நகரத்தின் வெப்பத்தைக் குறைக்க முடியும். புரிந்து கொண்டு அனைவரும் செயல் படுவோம். தெரிந்த ஈடுபடக் கூடிய அனைவரின் ஒத்துழைப் பெற்று செயல் பட்டால் உலகத்தின் வெப்பத்தையே தமிழகத்தால் குறைக்க முடியும்.
நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவது இயல்பே!
ஆனால் இப்போது நாம் மட்டும் நன்றாக வாழ முடிவது , நம் முந்தின தலை முறையினர் செயல் பட்டு இருப்பதாலேயே!
முயற்சியை செய்வோம்!
வெற்றி பெறுவது அடுத்த தலை முறை ஆனாலும் நன்றே!

சக்தி சுரபி

தற்போது தான் சொல்வனம் என்ற இணைய இதழில் சக்தி சுரபி என்ற இயற்கை எரிவாயு வீடுகளுக்கு பயன் படுத்தும் படியாக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்திலிருந்து அங்கு அருகாமையில் உள்ள மக்களுக்கு அறிமுகம் செய்து இருக்கிறார்கள். இதை அவர்கள் செய்து பல வருடங்கள் ஆகிறது. இப்போது தான் தெரிந்து கொள்ள முடிந்தது. சாண எரிவாயு அல்ல இது, காய்கறிக் கழிவுகளை இதற்கு பயன் படுத்துகிறார்கள். இதை படிப்பவர்கள் சொல்வனத்தில் சென்று பார்த்து பயன் பெறுமாறும், தெரிந்தவர்கள் பயன் படக் கூடியவர்களிடமும் இதை சொல்ல வேண்டுகிறேன். இனிமேல் வரக் கூடிய காலங்களில் எரிவாயுவிற்கான மானியம் குறைந்து விலைகள் அதிகமாகும் முன்னாலேயே நம்மால் முடிந்த அளவு செயல் பட வேண்டும்! சிறு நகரங்களில் தனி வீடுகளில் வசிக்கும் மக்கள், பெரு நகரங்களில் குழுவாக தனி வீடுகளில் வசிக்கும் மக்களும் இதை நன்றாக பயன் படுத்த முடியும்! அரசுகளை குறை சொல்வதை குறைத்துக் கொண்டு நம்மால் முடிந்த அளவு இயற்கைக்கு இசைந்த அளவு வாழப் பழக வேண்டும்!

தேர்தல்

அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அனைவரும் தங்கள் வாக்குகளை மறக்காமல் செலுத்தி விடுங்கள்.
நன்றி!

Monday, January 10, 2011

ஸ்ரீஅம்பாள் திருப்பள்ளியெழுச்சி

ஸ்ரீஅம்பாள் திருப்பள்ளியெழுச்சி

1.தூங்கிய கங்கை எழுந்தது தெய்வப் பொலிவு தழைத்திடவே
செங்கதிரோனும் உதய கிரி கண் சேரவரும் தருணம்
மங்கள கீதம் முழங்கியதெங்கும் மந்திரம் ஓங்கின காண்
பங்கஜ லோசனி சங்கரியே நீ பள்ளி யெழுந்தருள்வாய்
பார்முழுதும் சிவ பரிமள மோங்க பள்ளி யெழுந்தருள்வாய்
பங்கஜ லோசனி சங்கரியே நீ பள்ளி யெழுந்தருள்வாய்!

2.தேவரும் முனிவரும் திரளாய் வந்து திருப் பணி புரிகின்றார்
ஆவலுடன் நின தரண் மனை வாயிலில் அரசரும் நிறைகின்றார்
சேவல் எழுந்தது சங்கோடு துந்துபி ஜெய ஜெய என்பது காண்
பாவனி கெளரி பவானி மகேஸ்வரி பள்ளி எழுந்தருள்வாய்!

3.சஞ்சல இரவு முடிந்தது சமரச சாந்த சமாதியினுள்
மஞ்சுள வனஜம் மலர்ந்தது ஹம்ச மனோஹர வாரியிலே
விஞ்சிய இன்பம் மிதந்து தவழ்ந்தது வேத மிசைப் பது காண்
பஞ்ச மனோபவ ரூபிணி பகவதி பள்ளி எழுந்தருள்வாய்!

4.முருகனும் மதகஜ வதனனும் நின் திரு முன் வர வருகின்றார்
அருளலைப் போல் ஹர ஹர யெனும் அடியவர் அவர் பின்னர் வருகின்றார்
தருமம் தழைய தவ முறை வளர தரணி விளங்கிடவே
பருகிய கருணைப் பெருகவுமினி நீ பள்ளி யெழுந்தருள்வாய்!

Tuesday, January 4, 2011

ஞானானந்தர் திருப்பள்ளியெழுச்சி

ஞானானந்தர் திருப்பள்ளியெழுச்சி

குரு மொழி கொண்டு நன்னெறி நின்ற பக்தர் தம்
உத்தம உலாக் கமலங்கள் மலரவும்
இருள் வழி சென்றுளம் அலமந்து நிற்குமிவ்
விரு நில மாந்தரின் மருளெல்லாம் மாறவும்
பொருளீட்டும் வெறி நீங்கி பூதலத்தோரெல்லாம்
பூரண இன்பம் பெரும்வழி எய்தவும்
அருள் தேடும் அன்பரைக் காக்கும் ஞானனந்தப்
பரம் பொருளே பள்ளி யெழுந்தருளாயே!

அன்னையின் மிக்க நின் அன்பினைக் காணவும்
மின்னும் நின் பொன்முகம் கண்டு களிக்கவும்
பின்னும் நின் தாமரைத் தாள்களில் வீழ்ந்து நின்
புன்முறுவல் தனைக் கண்டுளம் பொங்கவும்
இன்னல்கள் நீக்கும் நின் தண் ண ளிப் பார்வையும்
இன்சொல்லும் பெற்றவர் தன்னை மறக்கவும்
முன்னைத் தவம் செய்தோர் வந்து நின்றார் ஞான
மன்னவனே பள்ளி யெழுந்தருளாயே!

பூமாலை கொண்டு நற் புண்ணியர் வந்துனை
வாழ்த்தி வணங்கிடக் காத்து நிற்கின்றார்
பாமாலை கொண்டுனைப் போற்றும் பக்தரெலாம்
பாடிப் பரவசமாகி நின்றார் உந்தன்
நாமாவை நாவார நாளும் பாடும் இவர்
நோக்கம் உந்தன் கடைக் கண்ணோக்கம் இந்நோக்கம்
ஆமாறருள் செய்ய அமல ஞானனந்த க்
கோமானே பள்ளி யெழுந்தருளாயே!

வடமொழி வேதத்தின் வாழ்த்தொலி கேட்கவும்
குடமுனி கீதங்கள் மடந்தையர் பாடவும்
உடனிருந் துறு பணி உவகையோடியற்றிட
உம்பரும் வந்து நும் மருங்கினில் நின்றார்
மிடியினை நீக்கி பவப் பிணி போக்கிடும்
தெய்வத் தென்னாங்கூர் அமர்ந்த ஞானனந்த
வடிவினில் அடியரை வாழ வைக்க வந்த
வள்ளலே பள்ளி யெழுந்தருளாயே!

முற்றும் துறந்த முனிவரும் கைதொழ
கற்றவர் கண்டு வியந்து மகிழ்ந்திட
குற்றேவல் செய்ய குவலயத் தொரன்றி
மற்றுலகத் தோறும் வந்து நின்றார்
குற்றம் செய்தோர் உந்தன் பொற்கழலுற்றவர்
குற்றம் நீங்கி நலம் பெற்றவர் உய்ந்திட
நற்றவத் தோரெல்லாம் நாடும் ஞானனந்தக்
கொற்றவனே பள்ளி யெழுந்தருளாயே!
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

குரு வணக்கம்!

ஞானானந்தா நமோஸ்துதே!
ஞானசத்குரோ நமோஸ்துதே!
அத்புத சரிதா நமோஸ்துதே!
ஆனந்த ரூபா நமோஸ்துதே!
இன்பப்பொருளே நமோஸ்துதே!
ஈசனும் நீயே நமோஸ்துதே!
உம்பர்கள் தருவே நமோஸ்துதே!
ஊமைக்கருள் செய்தவா நமோஸ்துதே!
எங்கள் தெய்வமே நமோஸ்துதே!
ஏழைக்கெளியாய் நமோஸ்துதே!
ஐங்கர ப்ரியனே நமோஸ்துதே!
ஐயம் தீர்ப்பாய் நமோஸ்துதே!
ஒப்பிலா மணியே நமோஸ்துதே!
ஓங்காரப்பொருளே நமோஸ்துதே!
ஔஷதம் நீயே நமோஸ்துதே!
அனைத்தும் நீயே நமோஸ்துதே!
ஞான சத்குரோ நமோஸ்துதே!
ஞானானந்தா நமோஸ்துதே!