Tuesday, March 31, 2020

சிவ வாக்கியர் பாடல்


சிவ வாக்கியர் பாடல்

ஓம் நம:சிவாய ஓம் ஓம்நம:சிவாய
ஓம் நம:சிவாய ஓம் ஓம்நம:சிவாய

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே.
(ஓம்நம:சிவாய)
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.
(ஓம்நம:சிவாய)
நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராம ராம ராம என்ற நாமமே.
(ஓம்நம:சிவாய)
அஞ்செழுத்தில் பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்து கூற வல்லீரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.
(ஓம்நம:சிவாய)
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூலமான் மழு
எடுத்த பாத நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காணவல்லரோ.
(ஓம்நம:சிவாய)
உருவம் அல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல
மருவும் அல்ல காதம் அல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாகி நின்ற நேர்மை யாவர் காணவல்லரே.
(ஓம்நம:சிவாய)
மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்
நம்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்
எண் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே.
(ஓம்நம:சிவாய)
ஆனவஞ் செழுத்துளே எண்டமும் அகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவலுற்றதே.
(ஓம்நம:சிவாய)
நினைப்பதொன்று கண்டிலேன் நியலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அநாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே.
(ஓம்நம:சிவாய)
பண்டு நான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாதிலே செபித்து விட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை.
(ஓம்நம:சிவாய)
அம்பலத்தை அம்பு கொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கு என்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செம்பொன்னப்பலவூதுள்ளே தெளிந்து சிவாயமே.
(ஓம்நம:சிவாய)
அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாம் மர்ந்ததே சிவாயமே.
(ஓம்நம:சிவாய)
மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம்
ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லை
(ஓம்நம:சிவாய)
நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும்
நமச்சிவாய மஞ்சுதஞ்சும் புராணமான மாய்கையை
நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள் இருக்கவே
நமச்சிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே.
(ஓம்நம:சிவாய)
இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்டோர் இனி பிறப்பிதிங்கில்லையே.
(ஓம்நம:சிவாய)
கார கார கார காவல் ஊழி காவலன்
போர் போர் போர் போர் போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ
ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே.
(ஓம்நம:சிவாய)
விண்ணிலுள்ள தேவர்கள்  அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான்
மண்ணில் பிறப்பறத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே.
(ஓம்நம:சிவாய)
அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்
மகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
சிகரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே.
(ஓம்நம:சிவாய)
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தன்மஒஇயான மந்திரம் சமைந்த ரூபமாகிய
வெண்மையான மந்திரம் விளந்து நீறதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே.
(ஓம்நம:சிவாய)
ஓம்நம:சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம்நம:சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
ஓம்நம:சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம்நம:சிவாயமே உட்கலந்து நிற்குமே.
(ஓம்நம:சிவாய)

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

                         

சிவமானஸ பூஜா


     சிவமானஸ பூஜா

ரத்னை: கல்பிதமாஸனம் ஹிமஜலை: ஸ்நானம் ச திவ்யாம்பரம்
நானா ரத்ன விபூஷிதம் ம்ருகமதா மோதாங்கிதம் சந்தனம்
ஜாதி சம்பக பல்லவ பத்ர ரசிதம் புஷ்பம் ச தூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பசுபதே ஹ்ருத்கல்பதம் க்ருஹ்யதாம்||

ஸௌவர்ணே நவரத்ன கண்டரசிதே பாத்ரேக்ருதம் பாயஸம்
பக்ஷ்யம் பஞ்சவிதம் பயோததிம் ரம்பாபலம் பானகம்
சாகானாமயுதம் ஜலம் ருசிகரம் கர்ப்பூர கண்டோஜ்ஜ்வலம்
தாம்பூலம் மனஸா மயா விரசிதம் பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு||

சத்ரம் சாமரயோர் யுகம் வ்யஜனம் சாதர்சகம் நிர்மலம்
வீணா பேரி ம்ருதங்க காஹல கலா கீதம் ச ந்ருத்யம் ததா
ஸாஷ்டாங்கம் ப்ரணதி ஸ்துதிர் பஹுவிதா ஹ்யேதத் ஸமஸ்தம் மயா
ஸங்கல்பேண ஸமர்ப்பிதம் தவ விபோ பூஜாம் க்ருஹாண ப்ரபோ||

ஆத்மா த்வ கிரிஜா மதி: ஸஹசரா:பராணா: சரீரம் க்ருஹம்
பூஜா தே விஷயோபபோக ரசனா நித்ரா ஸமாதிஸ்திதி:
ஸஞ்சார: பதயோ:ப்ரதக்ஷிண விதி: ஸ்தோத்ராணி ஸர்வா
திரோ: யத்யத் கர்ம கரோமி தத்ததகிலம் சம்போ தவாராதனம்||

கரசரண க்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா
ச்ரவண நயனஜம் வா மானஸம் வாபராதம்
விஹிதமஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீமஹாதேவ சம்போ||

||ஸ்ரீசங்கராச்சார்ய விரசிதம் சிவமானஸ பூஜா ஸம்பூர்ணம்||

ஜெய ஜெய ஜெய சக்தி


ஜெய ஜெய ஜெய சக்தி ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய ஜெய வெனப் பாடிப் பணிந்தோம் ஜகமெங்கும் அமைதியை த் தா
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
த்ருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க தேவையெல்லாம் அடைய
பக்தி பெருகிட பாடி உருகிட பணிப்பாய் அன்பில் எமை
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
இரண்டுகள் போக மூன்றுகள் அகல் ஈச்வரி வரமருள்வாய்
அம்மம்மா ஈச்வரி வரமருள்வாய்
கரங்குவித்தோம் இனி காலை விடோமடி கரங்குவித்தோம் இனிகாலைவிடோமடி
கருணையுடன் அணைப்பாய்
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
காசினியில் எங்கும் வேற்றுமை  போக கருத்தினில் அன்பருள்வாய்
அம்மம்மா கருத்தினில் அன்பருள்வாய்
தேஜசுடன் வாழ காட்டடி காட்சி தேவி உன் அடைக்கலமே
தேஜசுடன் வாழ காட்டடி காட்சி தேவி உன் அடைக்கலமே
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
நமஸ்காரம் இருவினை கரத்தினில் ஞான
நல்லோளி தீபம் வைத்து
ஞான நல்லொளி தீபம் வைத்து நமஸ்காரம் செய்து
ஹாரத்தி செய்தோம் நமஸ்காரம் செய்து ஹாரத்தி செய்தோம்
ஞாலத்தில் அமைதியைத்தா
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய ஜெய ஜெய சக்தி ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய ஜெய வெனப் பாடிப் பணிந்தோம் ஜகமெங்கும் அமைதியை த் தா
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஓம் கணபதி நாதா ஷண்முக நாதா ஓம் த்ரிகுணாதீதா க்ருஷ்ணா ஓம் த்ரிகுணாதீதா
ஓம் ஸ்ரீராமா மஹாதேவ சம்போ
ஓம் ஸ்ரீராமா மஹாதேவ சம்போ
ஓம் ஜய ஜகத் ஜனனி
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய ஜெய ஜெய சக்தி ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய ஜெய வெனப் பாடிப் பணிந்தோம் ஜகமெங்கும் அமைதியை த் தா
ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய ஜெய வெனப் பாடிப் பணிந்தோம் ஜகமெங்கும் அமைதியை த் தா. 

Thursday, March 12, 2020

ஆஞ்ஜனேயர் கீர்த்தனங்கள்


ஆஞ்ஜனேயர் கீர்த்தனங்கள்

ராகம்: ஹிந்தோளம்                                            தாளம்: ஆதி
அன்னையின் துயர் நிக்கி அன்புருவாய் நின்ற
ஆஞ்ஜனேயரே சரணம்
வாயுகுமாரரே வானர வீரரே
ஓயாமல் ராமரை உளந்தன்னில் பூஜிப்பவரே(அன்னை)

ஸ்ரீராமதூதராகி ஆழ்கடல் தாண்டி
ஸீதையை சிறைமீட்டு சிரஞ்ஜீவியானீரே
மலைதனைக் கொணர்ந்து இளயவரைக் காத்தீரே
என் நிலை கண்டு மனமிரங்கி காத்தருள்வீரே(அன்னை)

                             …………..
ராகம்: ஆபேரி                                                    தாளம்: ஆதி
ஸஞ்ஜீவி மலையைக் கொணர்ந்தவன்
சிரஞ்ஜீவி எனும் பெயர் க்கொண்டவன் – ஹனுமன்(ஸஞ்ஜீவி)

அஞ்ஜனா தேவி மைந்தனிவன் – வாழ்வில்
சஞ்சலம் அகற்றவே பிறந்தவன் – ஹனுமன்(ஸஞ்ஜீவி)

ராமனுக்காகப் பிறந்தவன்
ரகுராமனை வாழ்விப்பதைல் சிறந்தவன் – ஹனுமன்(ஸஞ்ஜீவி)

ஞானபண்டிதனாக நின்றவன் நம்முன்
ஞானானந்தனாக நிற்பவன் – ஹனுமன் (ஸஞ்ஜீவி) 
                          ……………

ராகம்: கதன குதூகலம்                                      தாளம்: ஆதி
ஆஞ்ஜனேயம் அதி பாடலானனம்
காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம்
பாவயாமி பவமான நந்தனம்

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலில்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்
             …………………….
ராகம்: ஆரபி                              தாளம்: ஆதி
ஆஞ்ஜனேய பரமானந்த மூர்த்தே
அகணித குணகூர்த்தே
அபஹ்ருத ரகுவர பக்த ஜனார்த்தே
அவனத மா மனோரத பரிபூர்த்தே (ஆஞ்ஜனேய)

மைதிலி சோக வினாச ஸுதாகர
மாருதப்ரிய தனுஜாத்மவதாம் வர
மதபர நிசிசர லங்கா பயங்கர
மங்களகர ராமதாஸ ஹ்ருத் கோசர (ஆஞ்ஜனேய)
                         ………………………..
ராகம்: கல்யாணி                      தாளம்: ஆதி
வந்தருள்புரி வரதா வாயுகுமாரா
ஸுந்தர முடி கொண்ட தூய எழில் கோதண்ட
சந்த ராகவன் கொண்ட ஸகல ஜெய உத்தண்ட (வந்தருள்)

அஞ்ஜனையருள் பாலா அடியவர்க்கருள் சீலா
வஞ்ச ராக்ஷஸர்காலா வரந்தருள் க்ருபாலோலா(வந்தருள்)

மன்ன ராகவன் தூத மா ரமக்ருஷ்ணன் ஓத
இன்னல் தீர்த்தருள் நாதா இலகு நல்வர தாதா(வந்தருள்)
                     …………………………….



தன்ய அஞ்ஜனீச ஸுத த்யாசே நாவ ஹனுமந்த
ஜேணே ஸீதா சுத்தி கேளி ராமஸிதா பேடவிலி
த்ரோணகிரி ஜோ ஆணீலா லக்ஷுமண வாஞ்சவீலா
ஐஸா மாருதி உபகாரீ   துகா லோளே சரணாவரீ.

குருஸ்துதி


குருஸ்துதி

தக்ஷிணாமூர்த்தி ஸமாரம்பாம், சங்கராசார்ய மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

நாராயணம், பத்மபுவம், வஸிஷ்டம்,
சக்திம் ச தத்புத்ர பராசரஞ்ச!
வ்யாஸம், சுகம், கௌடபதம் மஹாந்தம்
கோவிந்த யோகீந்த்ர மதாஸ்ய சிஷ்யம்!!

ஸ்ரீசங்கராசார்ய மதாஸ்ய, பத்மபாதம் ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம்!
தம் தோடகம், வார்த்திக காரமன்யான் அஸ்மத் குரூன் ஸந்தத மானதோஸ்மி!!

யதங்க்ரி கமலத்வந்தம் த்வந்த்வ தாப நிவாரகம்!
தாரகம் பவஸிந்தோஸ்ச தம் குரும் ப்ரணமாம்யஹம்!!

யத்பாத பாம்ஸவ: ஸந்த: கேபி ஸம்ஸார வாரிதே:
ஸேதுபந்தாய கல்பந்தே தேசிகம் தமுபாஸ்மஹே!!

ஸம்ஸார வ்ருக்ஷமாரூடா: பதந்தோ நரகார்ணவே!
ஸர்வே யேனோத்ருதா லோகாஸ் தஸ்மை ஸ்ரீகுரவே நம:!!

குருர் ப்ரஹ்மா, குருர் விஷ்ணு:, குருர்தேவோ மஹோச்வர:
குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:!!

அகண்டமண்டலாகாரம் வ்யாப்தம் யேன சராசரம்
தத்பதம் தர்சிதம் யேன தஸ்மை ஸ்ரீகுரவே நம:!!

தேஹே ஜீவத்வமாபன்னம் சைதன்யம் நிஷ்களம் பரம்
த்வம்பதம் தர்சிதம் யேன தஸ்மை ஸ்ரீகுரவே நம:!!

அகண்டம் பரமார்த்தம் ஸத் ஐக்யம் ச த்வம் ததோ சுபம்
அஸினா தர்சிதம் யேன தஸ்மை ஸ்ரீகுரவே நம:

ஸர்வ ச்ருதி சிரோரத்ன நீராஜித பதாம்புஜம்
வேதாந்தாம்புஜ ஸூர்யாபம் ஸ்ரீகுரும் சரணம் வ்ரஜேத்!!

சைதன்யம் சாச்வதம் சாந்தம் மாயாதீதம் நிரஞ்சனம்
நாதபிந்து கலாதீதம் தஸ்மை ஸ்ரீகுரவே நம:

ஸ்தாவரம் ஜங்கமம் சேதி யத்கிஞ்சித் ஜகதீதலே
வ்யாப்தம் யஸ்அ சிதா ஸர்வம் தஸ்மை ஸ்ரீகுரவே நம:

த்வம் பிதா த்வம் ச மே மாதா த்வம் பந்துஸ் த்வம் ச தைவதம்
ஸம்ஸார ப்ரீதி பங்காய துப்யம் ஸ்ரீகுரவே நம:
யத் ஸத்தயா ஜகத் ஸத்வம் யத் ப்ரகாசேன பாயுதம்
நந்தாம் ச யதானந்தாத் தஸ்மை ஸ்ரீகுரவே நம:

யேன சேதயதாபூர்ய சித்தம் சேதயதே நர:
ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷுப்த்யாதௌ தஸ்மை ஸ்ரீகுரவே நம:

யஸ்ய ஞானாதிதம் விச்வம் அத்ருச்யம் பேத பேதத:
ஸத்ஸ்வரூபாவசேஷம் ச தஸ்மை ஸ்ரீகுரவே நம:

ய ஏவ கார்யரூபேண காரணேணாபி பாதி ச
கார்ய கார நிர்முக்த: தஸ்மை ஸ்ரீகுரவே நம:

ஞானசக்தி ஸ்வரூபாய காமிதார்த்த ப்ரதாயினே
புக்தி முக்தி ப்ரதாத்ரே ச தஸ்மை ஸ்ரீகுரவே நம:

அனேக ஜன்ம ஸம்ப்ராப்த கர்மகோடி விதாஹினே
ஞானானல ப்ரபாவேன தஸ்மை ஸ்ரீகுரவே நம:

ந குரோரதிகம் தத்வம் ந குரோரதிகம் தப:
ந குரோரதிகம் ஞானம் தஸ்மை ஸ்ரீகுரவே நம:

ஏக ஏவ பரோ பந்துர் விஷமே ஸமுபஸ்திதே
நி:ஸ்ப்ருஹ: கருணாஸிந்து தஸ்மை ஸ்ரீகுரவே நம:

பவாரண்ய ப்ரவிஷ்டஸ்ய திங்மோஹ ப்ராந்த சேதஸ:
யேன சந்தர்சித: பந்தாஸ் தஸ்மை ஸ்ரீகுரவே நம:

ஹரணம் பவரோகஸ்ய தரணம் க்லேச வாரிதே:
பரணம் ஸர்வலோகஸ்ய சரணம் சரணம் குரோ:

நித்யாய நிர்விகாராய நிரவத்யாய யோகினே
நிஷ்களாய நிரீஹாய சிவாய குரவே நம:

சிஷ்யஹ்ருத் பத்ம ஸூர்யாய ஸத்யாய ஞானரூபிணே
வேதாந்த வாக்ய வேத்யாய சிவாய குரவே நம:

உபாயோபேய ரூபாய ஸதுபாய ப்ரதர்சினே
அநிர்வாச்யாய வாச்யாய சிவாய குரவே நம:

கார்யகாரண ரூபாய ரூபாரூபாய தே ஸதா
அப்ரமேய ஸ்வரூபாய சிவாய குரவே நம:

த்ருக் த்ருச்ய த்ரஷ்ட்ரு ரூபாய நிஷ்பன்ன நிஜரூபிணே
அபாராயாத்விதீயாய சிவாய குரவே நம:

குணதாராய குணினே குணவர்ஜித ரூபிணே
ஜன்மினே ஜன்மஹீனாய சிவாய குரவே நம:

அனாத்யாயாகிலாத்யாய மாயினே கதமாயினே
அரூபாய ஸ்வரூபாய சிவாய குரவே நம:

ஸர்வமந்த்ர ஸ்வரூபாய ஸர்வதந்த்ர ஸ்வரூபிணே
ஸர்வகார்ய ஸமஸ்த்தாய சிவாய குரவே நம:

ஸ்ரீமத் பரப்ரஹ்ம குரும் ஸ்மராமி
ஸ்ரீமத் பரப்ரஹ்ம குரும் பஜாமி
ஸ்ரீமத் பரப்ரஹ்ம குரும் வதாமி
ஸ்ரீமத் பரப்ரஹ்ம குரும் நமாமி

ப்ரஹ்மானந்தம் பரமஸுகதம் கேவலம் ஞானமூர்த்திம்
த்வந்த்வாதீதம் ககன ஸத்ருசம் தத்வமஸ்யாதி லக்ஷ்யம்
ஏகம் நித்யம் விமலமசலம் ஸர்வதீ ஸாக்ஷி பூதம்
பாவாதீதம் த்ரிகுண ரைதம் ஸத்குரும் தம் நமாமி

ஆனந்தம் ஆனந்தகரம் ப்ரஸன்னம்
ஞானஸ்வரூபம் நிஜபோத யுக்தம்
யோகீந்த்ர மீட்யம் பவரோக வைத்யம்
ஸ்ரீமத் குரும் நித்ய மஹம் நமாமி

மந்தஸ்மித முகாம் போஜம் மஹனீய குணார்ணவம்
மதுரா பாஷிணம் சாந்தம் ஸர்வபூத தயாபரம்
பக்த வாத்ஸல்ய ஜலதிம் பரமானந்த விக்ரஹம்
ஞானானந்தம் ப்ரபன்னோஸ்மி நிர்மல ஞான ஸித்தயே

யஸ்யாந்தர் நாதி மத்யம் நஹி கரசரணம் நாம கோத்ரம் ச ஸூத்ரம்
நோ ஜாதிர் நைவ வர்ணே ந பவதி புருஷோ நோ நபும்ஸோ ந ச ஸ்த்ரீ
நாகாரம் நோ விகாரம் நஹிஜனி மரணம் நாஸ்தி புண்யம் ச பாபம்
நோ தத்வம் தத்வமேகம் ஸஹஜ ஸமரஸம் ஸத்குரும் தம் நமாமி

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துஸ்ச ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம்  த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ

கரசரணக்ருதம் வா க்காயஜம் கர்மஜம் வா
ச்ரவண நயனஜம் வா மானஸம் வாபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
சிவ சிவ கருணாப்தே ஸ்ரீமஹாதேவ சமோ

அந்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருணய பாவேன ரக்ஷ ரக்ஷ மஹேச்வர.

ஞானானந்த அஷ்டகம்


ஞானானந்த அஷ்டகம்

மங்களாபுரி ஸம்பூதம், மானவாதித மங்களம்
வெங்கோப ஸக்கு ஜாஜ்வல்யம் ஜ்யோதிம் வந்தே ஜகத்குரும்

பால்யாத் ப்ரபோத போதேந்த்ரம் சிவரத்ன கிரிஸ்ஸுதம்
ஞானானந்த கிரிச்ரேஷ்டம் ஞானிம் வந்தே ஜகத்குரும்

தாபஸார்ணவ தேவேந்த்ரம், ஸித்திலிங்க மடேச்வரம்
ஸஜ்ஜனாதி ஸமாயுக்தம் ஸத்யம் வந்தே ஜகத்குரும்

ஸத்ய ஸமாதி ப்ரக்ஞஸ்தம், ஸுப்ரஹ்மண்யம் ஸுரேச்வரம்,
பஞ்சாம்ரநாத யோகீந்த்ரம், ப்ரேமம் வந்தே ஜகத்குரும்

சிதக்னி குண்ட ஸ்ம்பூதம்,ஸித்த,ஸித்தேச்வராலயம்
தபோவனாக்னி தேவேசம், தத்வம் வந்தே ஜகத்குரும்

ஸர்வபூத தயார்ணவம், ஸர்வபூதாச்ரயாலயம்
ஸர்வ ஸித்தி ப்ரதாதம் தம் ஸித்தம் வந்தே ஜகத்குரும்

ப்ராஹ்மே முஹூர்த்த ப்ரக்ஞஸ்தம் ப்ரஹ்ம வித்யா ப்ரதாயகம்
ஸாயம் ஸந்த்யா ஸமாயுக்தம் மௌனிம் வந்தே ஜகத்குரும்

ஞானானதாஷ்டகம் ச்ரேஷ்டம் ப்ராதருத்தாய ய: படேத்
ஞானானந்த பதாம்போஜ ஞானானந்தம் ப்ராப்னுயாத்

ஞானானந்தம்! ஞானானந்தம்! ஞானானந்தம்!

நவக்ரஹ துதி


நவக்ரஹ துதி   

ஆதித்தன் ஸோமன் அங்காரகன் புந்தியண்டர் குரு
பேதித்த வெள்ளி சனி ராகு கேது பேருரைத்தால்
வாதித்த சூனியம் ஏவல் பிணிச்சண்டை வருமிடியும்
ஏதித்தலத்திலிராதே மிகச் செல்வ மேவிடுமே.

புஷ்பாஞ்சலி


புஷ்பாஞ்சலி

அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம்
புஷ்பமிந்திரிய நிக்ரஹ:
ஸர்வபூத தயா புஷ்பம்
க்ஷமா புஷ்பம் விசேஷத:
சாந்தி புஷ்பம் தப:புஷ்பம்
த்யான புஷ்பம் ததைவ ச
ஸத்யம் அஷ்டவிதம் புஷ்பம்
விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத்.

ஈஸ்வரன் துதி


ஈஸ்வரன் துதி

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க, வையகமும் துயர் தீர்கவே

விமலமதாய் வேறற்ற வகண்டாகார
விருத்தியினில் விளங்கிய ஸத்குருவே போற்றி!
அமலமதாயகண்ட பர வித்தையாகி
அவித்தையெல்லாம் நீக்கிய ஸத்குருவே போற்றி!

நிமலமதாம் வித்தைக்கும் அப்பாலாகி
நிச்சலமாய் நின்ற பரமகுருவே போற்றி!
ஸமமதுவாய் சற்றுமொரு சங்கமின்றிச்
சன்மார்க்கமான ஸத்குருவே போற்றி! போற்றி!.

நால்வர் துதி


நால்வர் துதி

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி!
வாழி திருநாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி! போற்றி!.

முருகன் துதி


முருகன் துதி

ஆறிரு தடந்தோள் வாழ்க, ஆறுமுகம் வாழ்க, வெற்பைக்
கூறு செய் தனிவேல் வாழ்க, குக்குடம் வாழ்க, செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க, யானை தன் அணங்கு வாழ்க,
மாறிலா வள்ளி வாழ்க, வாழ்க சீரடியார் எல்லாம்.

மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி – காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி! அன்னார்
சேவலும் மயிலும் போற்றி! திருக்கைவேல் போற்றி! போற்றி!

திருப்புகழ்


திருப்புகழ்

நாதபிந்து கலாதி நமோ நம
வேதமந்த்ர ஸ்வரூபா நமோ நம
ஞான பண்டித ஸ்வாமி நமோ நம – வெகுகோடி

நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூரா நமோ நம – பரசூரர்

சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிங்கிணி பாதா நமோ நம
தீர சம்ப்ரம வீரா நமோ நம – கிரிராஜ

தீபமங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம – அருள்தாராய்

ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலுங்குண ஆசார நீதியும்
ஈரமுங் குரு சீர்பாத சேவையும் – மறவாத

ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜகம்பீர நாடாளு நாயக – வயலூர

ஆதரம் பயிலாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முன்னாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயி – லையிலேகி
ஆதியந்த வுலாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் – பெருமாளே

தீபமங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம – அருள்தாராய்
        வினைதீராய்.

குருவாதபுரீச பஞ்சரத்னம்


குருவாதபுரீச பஞ்சரத்னம்

கல்யாணரூபாய கலௌ ஜனானாம்
கல்யாண தாத்ரே கருணா ஸுகாப்தே
கம்ப்வாதி திவ்யாயுத ஸத்கராய
வாதாலயதீச நமோ நமஸ்தே

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயணேத்யாதி ஜபத்பிருச்சை:
பக்தைஸ்ஸதா பூர்ண மஹாலயாய
ஸ்வதீர்த்த காங்கோபம வாரிமக்ன
நிவர்திதா சேஷ ருஜே நமஸ்தே (நாராயண)

ப்ராஹ்மே முஹூர்த்தே பரித: ஸ்வபக்தை:
ஸந்த்ருஷ்ட ஸர்வோத்தம விச்வரூப
ஸ்வதைல ஸம்ஸேவக ரோக ஹர்த்ரே
வாதாலயாதீச நமோ நமஸ்தே (நாராயண)

பாலான் ஸ்வகீயான் தவ ஸன்னிதானே
திவ்யான்ன தானாத் பரிபாலயத்பி:
ஸதா படத்பிஸ்ச புராண ரத்னம்
ஸம்ஸேவிதாயாஸ்து நமோ ஹரேதே(நாராயண)

நித்யான்ன தாத்ரே ச மஹீஸுரேப்ய:
நித்யம் திவிஸ்தைர் நிசி பூஜிதாய
மாத்ரா ச பித்ரா ச ததோத்தவேன
ஸம்பூஜிதாயாஸ்து நமோ நமஸ்தே(நாராயண)

அனந்த ராமாக்ய மஹிப்ரணீதம்
ஸ்தோத்ரம் படேத்யஸ்து நரஸ்த்ரிகாலம்
வாதாலயேசஸ்ய க்ருபாபலேன
லபேத ஸர்வாணி ச மங்களானி(நாராயண)

குருவாத புரீச பஞ்சகாக்யம்
ஸ்துதி ரத்னம் படதாம் ஸுமங்களம் ஸ்யாத்
ஹ்ருதிசாபி விசேத் ஹரிஸ்வயம்து
ரதி நாதாயுத துல்ய தேஹ காந்தி: (நாராயண).