Tuesday, December 18, 2012

செட்டிப் புண்ணியத்தில் ஸ்ரீ வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை

செட்டிப் புண்ணியத்தில் ஸ்ரீ வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை
அருள்மிகு தேவநாதப் பெருமாள் கோவில், செட்டிப் புண்ணியம் - 603204, காஞ்சி புரம் மாவட்டம் .
நந்தன வருடம் தை மாதம் 13 ம் தேதி ஜனவரி 27ம் தேதி ( 27-1-2013) அன்று மாணவ மாணவியர் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று  வெற்றி பெறுவதற்காக, இத்திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ யோகா ஹயக்ரீவருக்கு  ஸ்ரீ வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை வழக்கம் போல சிறப்பாக நடைபெற உள்ளது.
ரூ. 50, கட்டணமாக செலுத்தி கலந்து கொள்ளலாம் .
நிகழ்ச்சி நிரல்
காலை 4.30 மணி க்கு விஸ்வ ரூப தரிசனம்
6 மணி முதல் 7.30 மணி வரை ரட்சை பூஜை
9மணிக்கு  ஸ்ரீ ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
செயல் அலுவலர் ,
அருள்மிகு தேவநாத சுவாமி திருக்கோவில்,
செட்டிப்புண்ணியம் ,
செங்கல்பட்டு வட்டம்
603204.
தொலைபேசி ; 8675127999 / 9942993770.
நன்றி. வாழ்க பாரதம்!

Friday, October 19, 2012

சிவசைலம்

சிவசைலம்
எல்லாம் வல்ல ஸ த் குரு மூர்த்தியின் திருவருளால் சிவசைலம் என்ற திருத்தலத்தைப் பற்றி எழுத நினைக்கிறேன். முழுமை அடைய கணபதியைப் பணிகின்றேன்.


சிவசைலபதியையும் பரம கல்யாணி நாயகியையும் அழகிய
ஸ்நேக புரத்தையும் கடநா  நதியையும் வணங்குகின்றேன்.
அத்ரி மஹ ரிஷியால் பூஜை செய்யப்பட்டவரும் மங்களத்தைச் செய்பவரும் பக்தர்களின் கோரிக்கைகளை நன்றாய் பூர்த்தி செய்கின்றவரும் பதினாறு ஆவடையாளுடன் கூடியவருமாகிய சிவசைல பதியை நமஸ்கரிக்கின்றேன்.
நான்கு கைகளுடன் கூடியவளும் விசாலமான நேத்திரங்களுடன் கூடியவளும் செம்பரத்தை புஷ்பத்திற்கு சமமான சோபையுடையவளும் ஆகிய பரம கல்யாணியை சப்தார்த்தங்கள் நன்கு விளங்குவதன் பொருட்டு நமஸ்கரிக்கின்றேன். 

Thursday, October 18, 2012

ஆழ்வார்குறிச்சி

 ஆழ்வார்குறிச்சி
இந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் அம்பாசமுத்திரத்திலிருந்து கடையம் செல்லும் வழியில் உள்ளது.
இந்த ஊரில் இரண்டு நதிகள் ஓடுகின்றன. கடனா நதி, ராம நதி ( வர நதி ) .
காசி திருத்தலத்தில் வருணை, அஸி என்று இரண்டு நதிகள் உள்ளது போல இந்த அமைப்பு தோன்றுகிறது.
இந்த ஊரில் இரண்டு சிவன் கோவில்களும், இரண்டு பெருமாள் கோவில்களும் உள்ளன.

Friday, October 12, 2012

பித்ரு ஸ்துதி: ( தமிழ் அர்த்தம் )

பித்ரு ஸ்துதி: ( தமிழ் அர்த்தம் )

ப்ரம்ஹ தேவர் கூறினார்

ஜன்மத்தை அளிப்பவரும் எல்லா தேவர்களின் வடிவானவரும் ஸுகத்தைக் கொடுப்பவரும் மகிழ்ந்தவரும் நல்ல விருப்புடையவரும் பெரியவருமான பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

எல்லா யக்ஞங்களின் வடிவானவருக்கும் ஸ்வர்கமானவருக்கும் ப்ரம்ஹாவானவருக்கும் எல்லா தீர்த்தங்களையும் கண்டவருக்கும் கருணைக் கடலானவருக்கும் நமஸ்காரம்.

 எப்போதும் விரைவில் மகிழ்பவரும் சிவ வடிவானவருமான உமக்கு நமஸ்காரம்.

எப்போதும் பிழைகளைப் பொறுப்பவரும் ஸுக வடிவானவரும் ஸுகத்தை அளிப்பவருமான உமக்கு நமஸ்காரம்.

 கிடைத்தற்கரியதும் அறத்தையும் பொருளையும் பெறுதற் பொருட்டமைந்ததுமான இந்த மனித உடலை எவர் மூலமாக அடைந்தேனோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

 எவருடைய தர்சனம் தீர்த்தம்,ஸ்நானம் ,தவம்,ஹோமம்,ஜபம் முதலியவற்றின் புண்ணிய பலனாக அமையுமோ அத்தகைய மஹாகுருவுக்கும் குருவான பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

எவருடைய நமஸ்காரமும் ஸ்தோத்ரமும் கோடி முறை பித்ருக்களின் தர்ப்பணம் செய்ததற்கும் நூறு அச்வ மேதங்களைச் செய்ததற்கும் ஈடாகுமோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

பித்ரு தேவரின் புண்யமான இந்த ஸ்தோத்ரத்தை எந்த மனிதன் முயற்சியோடு தினமும் காலையில் எழுந்தும் பித்ரு ஸ்ராத்தத்திலும் தன் பிறந்த நாளிலும் பித்ருவின் முன்னின்றும் படிக்கிறானோ, அவனுக்கு   ஸர்வஜ்ஞத்வம் முதலியவற்றில் அடையக் கூடாதது என்று ஒன்றுமில்லை.

 ஒரு மகன் பலவிதமான தீய செயல்களைச் செய்த போதிலும் பித்ரு தேவரை ஸ்தோத்ரம் செய்தால் அவன் பிராயச்சித்தம் செய்து ஸுகமடையலாம். பித்ருக்களுக்கு ப்ரீதியை செய்த அவன் எல்லாக் கர்மாவிலும் தகுதியுடையவனாகிறான்.       

 

பித்ரு ஸ்துதி: ( தமிழ் )

பித்ரு ஸ்துதி: ( தமிழ் )
ப்ருஹத் தர்ம புராணத்தில் அமைந்துள்ளது இந்த ஸ்தோத்ரம்

                      ஸ்ரீ பிரம்மா  உவாச

ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச
ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே

ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே
 ஸர்வ தீர்த்தாவலோகாய  கருணா ஸாகராய ச

நம: ஸதா ஆஸு தோஷாய சிவ ரூபாய தே நம:
ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச

துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு:
ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:

தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம்
மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:

யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம்
அஸ்வ மேத சதை ஸ்துல்யம்  தஸ்மை பித்ரே நமோ நம:

                                   பல ச்ருதி:

இதம் ஸ்தோத்ரம் பிது: புண்யம் ய: படேத் ப்ரயதோ நர:
ப்ரத்யஹம் ப்ராதருத்தாய பித்ரு ஸ்ராத்த தினே s பி  ச
ஸ்வ ஜன்ம திவஸே ஸாக்ஷாத் பிதுரக்ரே ஸ்திதோபி வா
ந  தஸ்ய துர்லபம் கிஞ்சித் ஸர்வஜ்ஞதாதி வாஞ்சிதம்

நானாபகர்ம க்ருத்வாதி ய: ஸ்தௌதி பிதரம் ஸுத:
ஸ த்ருவம் ப்ரவிதாயைவ ப்ராயஸ்சித்தம் ஸுகீ பவேத்
பித்ரு ப்ரீதி கரோ நித்யம் ஸர்வ கர்மாண்யதார்ஹதி


                                       மங்களம் 
    

பித்ரு ஸ்துதி:

பித்ரு ஸ்துதி:
ப்ருஹத் தர்ம புராணத்தில் அமைந்துள்ள இந்த ஸ்தோத்ரம் தென் புலத்தாராகிய பித்ரு தேவர்களைப் பற்றியது.
       
                   ब्रह्मोवाच
ॐ नमः पित्रे जन्मदात्रे सर्व देव मयाय च
सुखदाय प्रसन्नाय सुप्रीताय महात्मने

सर्व यज्ञ स्वरूपाय स्वर्गाय पर मेष्टिने
सर्वतीर्थावलोकाय करुणा सागराय च

नमः सदा s s शु तोषाय शिव रूपाय ते नमः
सदा s पराध क्षमिणे सुखाय सुखदाय च

दुर्लभं मानुषमिदं येन लब्धं मया वपुः
संभावनीयं धर्मार्थे तस्मै पित्रे नमो नमः

तीर्थ स्नान तपो होम जपादि यस्य दर्शनम्
महागुरोश्च गुरवे तस्मै पित्रे नमो नमः

यस्य प्रणामस्तवानात्  कोटिशः पितृ तर्पणम्
अश्वमेधशतैस्तुल्यं तस्मै पित्रे नमो नमः


                       फल श्रुतिः

इदं स्तोत्रं पितुः पुण्यं यः पठेत्प्रयतो नरः
प्रत्यहं प्रातरुत्थाय पितृ श्राद्ध दिनेsपि च
स्व जन्म दिवसे साक्षात्पितुरग्रे स्थितो sपि वा
न  तस्य दुर्लभं किञ्चित् सर्वज्ञतादि वाञ्छितम्

नानापकर्म कृत्वापि यः स्तौति पितरं सुतः
स ध्रुवं प्रविधायैव प्रायश्चित्तं सुखी भवेत्
पितृप्रीतिकरो नित्यं सर्व कर्माण्यथार्हति
                       शुभम्     

Thursday, October 11, 2012

ஸ்ராத்தங்கள்

ஒரே நாளில் பல ஸ்ராத்தங்கள் சேர்ந்து வந்தால் செய்ய வேண்டிய ஸ்ராத்தங்கள், விட வேண்டிய ஸ்ராத்தங்கள்.

அமாவாசை அன்று மாதப்பிறப்பும் வந்தால் அன்று மாதப்பிறப்புக்காக மட்டும் தர்ப்பணம் செய்தால் போதும் .

அதே போல அமாவாசை அன்றே மன்வாதி, யுகாதி,வ்யதீபாதம் ,வைத்ருதி , க்ரஹணம் போன்றவைகள் வந்தாலும் அமாவாசை தவிர மற்றவைகளை செய்ய வேண்டும்.

சில நேரங்களில் அமாவாசை அன்று மாலை க்ரஹணம் நிகழ்ந்தால் காலையில் அமாவாசை தர்ப்பணமும் மாலை க்ரஹண தர்ப்பணமும் செய்ய வேண்டும்.

ஒரே நாளில் கீழ்க்கண்ட  ஸ்ராத்தங்கள் சேர்ந்து வந்தால் தனித்தனியாக எல்லாவற்றையும் செய்ய வேண்டியது,
அவைகள் - மாதப்பிறப்பு, யுகாதி , மன்வாதி , க்ரஹணம், அர்த்தோதயம் ,மஹோதயம், வைத்ருதி , வ்யதீபாதம்.ஒரே நாளில் செய்யும் ஸ்ராத்தங்களின் முன் பின் க்ரமம்

அமாவாசையும் சோதகும்பமும் சேர்ந்து வந்தால் முதலில் சோதகும்பமும் பிறகு அமாவாசையும் செய்ய வேண்டும்.

அதே போல மாஸிகமும் அமாவாசையும் சேர்ந்து வந்தால் முதலில் மாஸிகமும் பிறகு அமாவாசையும் செய்ய வேண்டும்.

அதே போல ப்ரத்யாப்தீகமும் அமாவாசையும் சேர்ந்து வந்தால் முதலில் ப்ரத்யாப்தீகமும் பிறகு அமாவாசையும் செய்ய வேண்டும்.

ப்ரத்யாப்தீகமும் மாசப்பிறப்பு , யுகாதி போன்றவைகள் சேர்ந்து வந்தால்
மாசப்பிறப்பு யுகாதி போன்றவற்றை முதலில் செய்து விட்டு பிறகு ப்ரத்யாப்தீகம் செய்ய வேண்டும்.

ப்ரத்யாப்தீகமும் மாஸிகமும் சேர்ந்து வந்தால் முதலில் மாஸிகமும் பிறகு
ப்ரத்யாப்தீகமும் செய்ய வேண்டும்.

ஆப்தீகமும்  மாஸிகமும் சேர்ந்து வந்தால் முதலில் ஆப்தீகமும் பிறகு மாஸிகமும் செய்ய வேண்டும்.

Wednesday, October 10, 2012

ஷண்ணவதி ஸ்ராத்தங்கள்

ஷண்ணவதி ஸ்ராத்தங்கள்
எல்லாம் வல்ல ஸத்குரு மூர்த்தியின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
ஒரு வருடத்தில் 96 தடவை ஸ்ராத்தங்கள் ஹிரண்ய ரூபமாக செய்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இது விசேஷமாக செய்ய முடிந்தவர்கள் செய்யலாம். எனவே அதைப் பற்றிக் குறிப்பு மட்டும் எழுதப் படுகிறது.
தமிழ் மாதங்களை வைத்து இந்தக் குறிப்பு எழுதுகிறோம்.
பன்னிரண்டு மாதங்களின் மாதப்பிறப்பு - பன்னிரண்டு ,
அமாவாசை - பன்னிரண்டு, அஷ்டகை -பன்னிரண்டு,
வ்யதீபாதம் - பதிமூன்று , வைத்ருதி -  பதிமூன்று ,
மன்வாதி - பதினான்கு, யுகாதி - நான்கு, மஹாளயம் - பதினாறு.

அஷ்டகைகள்  என்பது - மார்கழி மாதத்திலிருந்து பங்குனி மாதம் வரை உள்ள மாதங்களில் வரும் கிருஷ்ண பக்ஷ ஸப்தமி ( திஸ்ரோஷ்டகை ),
கிருஷ்ண பக்ஷ அஷ்டமி ( அஷ்டகா ),  கிருஷ்ண பக்ஷநவமி ( அன்வஷ்டகா ) இவையே.
Tuesday, October 2, 2012

நென்மேலி

எல்லோரும் பெற்றோர்கள் இருக்கும் வரை அவர்களை சரியான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும், என்று மட்டும் நினைக்கிறார்கள்.
இருக்கும் வரை எவ்வாறு சரியாக கவனித்துக் கொண்டோமோ, அவர்களின் காலம் கடந்த பின்  செய்ய வேண்டியவைகளையும் தெரிந்து கொண்டு நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.
முக்கியமாக ராமேஸ்வரம், காசி, கயா  மற்றும் புனித தலங்களுக்கு செல்லும்போது மறைந்த முன்னோர்களுக்காக சில சடங்குகள் செய்ய வேண்டும். அவற்றை செய்ய எல்லோருக்கும் வசதிகள் அமையாது.
செங்கல்பட்டு அருகில் நென்மேலி  என்ற திருத்தலம் அமைந்துள்ளது.
இது எளியவர்களின் கயா என்று கூறப்படுகிறது.
இதைப் பற்றி சிறு குறிப்பு.
செங்கல்பட்டு அருகே நென்மேலி  என்னும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள  
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதி பல நெடுங்காலமாக பெரியோர்களால் வணங்கப் படுகிறது.
மேலும் இந்த சன்னதியில் உள்ள உற்சவ மூர்த்தி " ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணர் " என்னும் திருநாமமும் இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம் அர்கிய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் காசிக்கு நிகரான க்ஷேத்ரம் என்றும் சௌலப்ய  கயா என்றும் வழங்கப்படுகிறது.
இந்த சன்னதியில் ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணி புரிந்த
ஸ்ரீ யாக்ஞ வல்கியரைக்  குருவாகக் கொண்ட சுக்ல யஜுர்  வேதத்தை  சேர்ந்த யக்ஞ நாராயண ஷர்மா சரஸ வாணி தம்பதிகள் இந்தப் பெருமானின் மீது ஆறாத பக்தி கொண்டிருந்தனர்.
மேலும் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தையும்  தெய்வ காரியங்களுக்கு செலவு செய்து விட்டதால், அரச தண்டனையை ஏற்க  விரும்பாமல்  திருவிடந்தை என்னும் திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
அவர்களுக்கு தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மனம் வருத்தத்துடன் மரணமடைந்தார்கள்.
அவர்களுடைய எண்ணத்தை எம்பெருமானே செய்ததாக பெருமாள் சாட்சியம் சொன்னார்.
அந்த திவானின் வேண்டுகோளுக்கு இணங்க சந்ததிகள்  இல்லாருக்கும் ஸ்ராத்தம் செய்ய இயலாதவர்களுக்கும் தானே முன்னின்று ஸ்ராத்தம் செய்து வைப்பதாக எத்தனித்து குதப காலம் என்னும் பித்ரு வேளையில் ( 12 மணி முதல் 1 மணி வரை ) ஒரு காலம் மட்டும் ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார்.

எனவே இங்கு ஸ்ராத்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடக்கும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதே ஸ்ராத்த சம்ரக்ஷணம் ஆகும்.
இந்த ஸ்வாமிக்கு நிவேதிக்கப்படும் வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்த்த துவையலும் நிவேதனமாகும்.
ஸ்வாமி  இதனை மட்டும் ஏற்று பித்ருக்களை திருப்தி செய்கிறார்.
தினமும் நடை பெறும் இந்த பூஜையில் அவரவர் பித்ருக்கள் திதியிலோ , அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ அல்லது என்று முடியுமோ அன்று கலந்து கொள்வது கயை  ஸ்ராத்தம் செய்த பலனைக்கொடுக்கும் .

அர்ச்சகரின் முகவரி;
ஸ்ரீ சம்பத் பட்டாச்சாரியார் ,
பிராமணர் வீதி,
நென்மேலி  போஸ்ட், வல்லம் வழி ,
செங்கல்பட்டு -603002,
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன் : 044 - 27420053. Mobile:9626283053.
இந்த தலம்  செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து  ஐந்தாவது கிலோ மீட்டரில் உள்ளது.

பித்ரு பூஜை பகல் 12 மணிக்கு மேல் மட்டுமே நடை பெறும், இதில் கலந்து
கொள்பவர்கள் 10 மணிக்கு சன்னதியில் இருக்க வேண்டும்.
அர்ச்சகரிடம் முன்னதாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நம் இல்லங்களில் முன்னோர்களுக்காக ஸ்ராத்தம் செய்தாலும் அந்த திதியில் இந்த சன்னதியில் பணம் அனுப்பி பூஜை செய்ய வேண்டிக் கொள்ளலாம்.
குறைந்த கட்டணம் தான், எனவே எல்லோரும் பயன் பெற வேண்டும்.

நன்றி. வாழ்க பாரதம். 

Tuesday, July 10, 2012

சண்டி ஹோமம்

சத்குருவின் திருவருளால் சண்டிகா  ஹோமமும் இதில் உள்ளது.
நன்றி.


http://www.scribd.com/doc/99683508/chandika-havanam

Wednesday, July 4, 2012

தாம்ரபரணி - 8

தாம்ரபரணி - 8
ஸ்ரீ வைகுண்டம் முதல் சங்கமம் வரை
தெற்காக                                                   - சாரதா தீர்த்தம்
                                    தக்ஷிண  வாகினி
தென் கிழக்கு                                             - ஸ்மராள தீர்த்தம்
தென் கிழக்கு                                              - மகா குஸும தீர்த்தம்
தென் கிழக்கு                                              - குஸும வ்ருஷ்டி தீர்த்தம் 
தென் கிழக்கு                                               - சத புத் புத தீர்த்தம்
                                   பூர்வ வாகினி
வட கரை                                        -  காந்தீஸ்வர தீர்த்தம்
எதிராக  தென் கரை                     - ரமா தீர்த்தம் , போகீ தீர்த்தம்,                        சக்ரதீர்த்தம்     முதலியவை ( ஆழ்வார் திருநகரி )
கிழக்காக                                             - நிதி தீர்த்தம்
அதற்கு அப்பால்                               - கால தீர்த்தம்
 அதற்கு அப்பால்                                - நிசா தீர்த்தம்
அதற்கு அப்பால்                                   - சுருதி தீர்த்தம்
அதற்கு அப்பால்                                      - மகர தீர்த்தம்
அதற்கு அப்பால்                                         - கலா தீர்த்தம்
அதற்கு அப்பால்                                         - மங்கள தீர்த்தம்
வட கரை                                                       - ஹர்ஷ தீர்த்தம்
வட கரை                                                      - லக்ஷ்மீ நாராயண தீர்த்தம்
வட கரை                                                  - பித்ரு தீர்த்தம் ( அப்பன் கோவில் )
வட கரை                                                - அச்விநீ தீர்த்தம் ( இரட்டைத் திருப்பதி )
வட கரை                                               - மோகாபக தீர்த்தம் ,
                                                                       முக்தி முத்திரா தீர்த்தம்
                                                                    மதாவள தீர்த்தம் முதலியவை
                                                                           ( பெருங்குளம் )
வட கரை                                                - ஞான தீர்த்தம் ( ஆறுமுக மங்கலம் )
வட கரை                                                 - அக்னி தீர்த்தம் ( அக்கா சாலை )
தென் கரை                                            - வஸ்து தீர்த்தம்
தென் கரை                                           - கங்கா தீர்த்தம் ( சொக்கப் பழங் கரை )
தென் கரை                                          - ஸோம தீர்த்தம் ( ஆற்றூர் )
தென் கரை                                            - சண்டிகா தீர்த்தம் ( சேந்த மங்கலம் )
தென் கரை கிழக்காக                      - வல்லீ தீர்த்தம்
                                                                       ஹர்ஷ  தீர்த்தம்
                                                                     கௌரீ தீர்த்தம்
                                                                       சம்பு நாராயண தீர்த்தம்
                                                                            சங்க ராஜ தீர்த்தம்
வட கரை                                               - அகஸ்திய தீர்த்தம்
                                                                               ஸங்கமேஸ்வர  தீர்த்தம்
அதற்கு கிழக்கு மூவாற்றுக் கடலில்
காயத்ரீ ,   ஸாவித்திரீ, ஸரஸ்வதீ தீர்த்தங்கள் ........

ஸத்குரு  பாதம் துணை .... 

தாம்ரபரணி -7

தாம்ரபரணி -7
சேரன் மகாதேவி முதல் ஸ்ரீ வைகுண்டம் வரை
மார்க்கண்டேய தீர்த்தம் சமீபம் - ரோமச தீர்த்தம் ( கோடக நல்லூர் , பத்தமடை )
அதன் கிழக்கு                                     - தௌர் வாஸ  தீர்த்தம்
                                                                             ( கரி சூழ்ந்த மங்கலம் துறை )
கரி சூழ்ந்த மங்கல துறைக்கு சமீபமாக செவலுக்கு  தென் மேற்கு திசையில் ஸ்ரீ விஷ்ணு பகவான் கலியுக முடிவில் கல்கி அவதாரம் செய்யப் போகிறார்.


அதன் கிழக்கு கரை                   - வைனதேய தீர்த்தம்
                                                                    ( கசாளி நதியின் சங்கமத்தில் )
அதற்கு எதிராக வட கரை            - சாயா தீர்த்தம்
அதன் கீழ்புறம்                                      - காந்தர்வ தீர்த்தம்
அதன் கீழ்புறம்                                   - பானு தீர்த்தம்
அதன் சமீபம்                                          -  பிரபாவ தீர்த்தம் 
அதன் சமீபம்                                         - கெளரி,சரஸ்வதி ,விருஷப தீர்த்தங்கள்
                                                                              ( செவல் )
                                                                        இவ்வளவும் சியாமா நதியின் கூடல் வரை

சியாமா நதியின் கூடல் ( பச்சையாறு )   - மந்திர தீர்த்தம்
அதற்கு வட திசை                                            - க்ஷிப்த புஷ்ப தீர்த்தம்
                                                                                         (சிந்து பூந்துறை)
அருகில்                                                                        - ரிஷி தீர்த்தம் (தருவை )
கீழக் கரையில்                                                   - ஸமிர்த்தி தீர்த்தம்
அதற்கு  வட திசை                                              - தயா தீர்த்தம்
அதற்கு     வட திசை                                       - புஜங்க மோசன தீர்த்தம்
அதற்கு வட திசை                                         - சூசி தீர்த்தம்
கீழக் கரையில்                                              - கேது தீர்த்தம் ,
                                                                                    உஷா தீர்த்தம் ,
                                                                                      ஹலானை தீர்த்தம்

              பூர்வ வாகினி
இராம தீர்த்தம் , ஜடாயு தீர்த்தம் ,ருத்ர பாத தீர்த்தம் ( திருவண்ணாத புரம்  அருவங்குளம் ) பாபவிமோசன தீர்த்தம் ,
                                              அச்ருத தீர்த்தம்
வட கரை                                                          - நதீ ஸ்தம்பன தீர்த்தம்
வட கரை                                                   - பூஷா பதன தீர்த்தம் ( செப்பரை )
வட கரை                                                     - துரிதாபக தீர்த்தம்
வட கரை                                                    - மங்கள தீர்த்தம் ( பாலாமடை )
வட கரை                                                   - மகர லோகித தீர்த்தம்
                    தக்ஷிண  வாகினி
        சித்திரா  சங்கம தீர்த்தம்
விஷ்ணு வனம் ( சீவலப் பேரி )               - கோ தீர்த்தம்
                                                                                    விஷ்ணு தீர்த்தம்
                                                                                  குச ஸ்தம்ப தீர்த்தம்
                                                                               ம்ருத்யுஞ் ஜய தீர்த்தம்
                                                                                  தைத்த ரீய தீர்த்தம்
                                                                                   ராஜ சூய தீர்த்தம்
                                                                        மகா  விரத தீர்த்தம்
ஸா த்திய தீர்த்தம் ,விச்வேதேவ  தீர்த்தம் ,
தசாவதார தீர்த்தம் ( அகரம் ) முதலியவை
தென் கரை                                                -  ஸப்த ரிஷி தீர்த்தம்
தென் கரை                                                  - மாஞ் ஜிஷ்ட தீர்த்தம்
தென் கரை                                                    - போகீ தீர்த்தம்
                          பூர்வ வாகினி
வட கரை                                              - கலச தீர்த்தம் ( ஸ்ரீ வைகுண்டம் )
              

தாம்ரபரணி - 6

தாம்ரபரணி - 6

கல்யாண தீர்த்தம் முதல் பாபவினாசம்  வரை
சிறிது வட கிழக்கில்                              -  நாரத தீர்த்தம்
அதன் வடக்கில்                                       - வருண தீர்த்தம் ( ஐந்தலை அருவி )
அதன் வட திசை                                     - ப்ராசேதஸ தீர்த்தம்
அதன் தெற்கு                                         - தும்புரு தீர்த்தம்
அதன் தெற்கு                                           - பர்வத தீர்த்தம்
பாபவினாசம்                                             - இந்திர கீல  தீர்த்தம்
அதன் வட திசை                                     - த்ரி நதீ சங்கம தீர்த்தம் 
பாபவினாசம்  முதல் கல்லிடைக் குறிச்சி வரை
                   பூர்வ வாகினி
பாபவிநாசத்திற்கு கிழக்கில் ( வட கரை ) - தீப தீர்த்தம்
அதன் கிழக்கு                                                        - சாலா  தீர்த்தம்
                                                                                     ( விக்கிரம சிங்க புரம் )
மணி முத்தா  நதி சங்கமம் ( தென் கரை )  - தேவி தீர்த்தம்
கிழக்கு கரை                                                    - வராஹ தீர்த்தம் ( குடமுருட்டி )
அதன்  கிழக்கு                                                  -  க்ருமிஹர தீர்த்தம்
                                                                                    ( ஹனுமான் சன்னதி )
 வட கரை                                                           - காச்யப தீர்த்தம் ( அம்பாசமுத்திரம் )
அதன் கிழக்கு ( தென் கரை )                      - பிருக தீர்த்தம்
அதன் கிழக்கு ( தென் கரை )                       - கண்வ தீர்த்தம்
                                                                                    ( ம்ருக தரேஸ்வரர் சன்னிதி )
            கல்லிடைக் குறிச்சி
கல்லிடைக் குறிச்சி முதல் சேரன் மகாதேவி வரை
                                          உத்தர வாகினி
  வட பாகம்                          - கோஷ்டீச்வர  தீர்த்தம் ( ஊர்க்காடு )
வட பாகம்                            - சக்ர தீர்த்தம் ( வெள்ளங் கொள்ளித்துறை  )
அதன் வட பாகம்               - மாண்டவ்ய தீர்த்தம்
அதன் வட பாகம் ( கிழக்கு கரை ) - கஜேந்திர மோக்ஷ தீர்த்தம்
                                                                          ( அத்தாழ  நல்லூர் )
அதன் சமீபத்தில்                                   - புஷ்ப வனேச தீர்த்தம் ( மருதுண்ணிக்காடு)
கடனா சங்கமத்தில் ( மேற்கு கரை ) - தண்ட பிரம்ம சாரி தீர்த்தம்
கிழக்கு கரை                                                 - கரும தீர்த்தம்
அதன் வடக்கு                                       - கடனா சங்கம தீர்த்தம்
                   பூர்வ வாகினி
வட கரையில்                                 - மானவ தீர்த்தம் ( பாப்பாக்குடி அருகில் )
தெற்காக                                           - கௌதம தீர்த்தம்
அதன் தென் பாகம்                      - பைசாச மோசன  தீர்த்தம்
அதன் கீழ் புறம் வட கரையில்   - பைரவ தீர்த்தம் ( அரிய நாயகி புரம் )
அதன் கீழ் புறம்                                     - யக்ஷ தீர்த்தம்
அதன் கீழ் புறம்                                    - கோ தீர்த்தம்
அதற்கப்பால்                                           - தர்ம தர்சன தீர்த்தம்
அதன் தென் கரையில்
( கோ தீர்த்தத்திற்கு தெற்காக )          - துர்கா தீர்த்தம் ( காரு குறிச்சி )
அதன் கிழக்காக                                     - விஷ்ணு தீர்த்தம் ( கூனியூர் )
அதன் கிழக்காக                                        - ஸோம  தீர்த்தம்

 சேரன் மகாதேவியில் தென் கரை
  கீழ்ப்பாகம்                                                  - வ்யாஸ தீர்த்தம் ( பக்தப் பிரியன் சந்நிதி )
அதன் கிழக்கு சமீபம்                             - மார்க்கண்டேய தீர்த்தம் 

தாம்ரபரணி -5

தாம்ரபரணி -5
பாண  தீர்த்த தடாகத்திலிருந்து வெளிப்படும் தாம்ரபர்ணி பூர்வ வாகினியாகவும் உத்தர வாகினியாகவும் தக்ஷிணவாஹினியாகவும்
 வெகு தூரம் பாய்ந்து இறுதியில் ஜெயந்தி புரம்  என்னும் திருச்செந்தூருக்கு வட திசையில் மூன்று பாகமாக சமுத்திரத்தில் கலக்கும் வரை சுமார் அறுபதுக்கும் அதிகமான தீர்த்தக் கட்டங்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறாள்.
அவை:
குப்த  ஸ்ருங்க குஹையிலிருந்து பாண  தீர்த்தம் வரை தீர்த்தக் கட்டங்கள்
                                            பூர்வ வாகினி
குகையின் கிழக்கு தென் கரை - ஊர்ஜஸ் தீர்த்தம்
குகையின் கிழக்கு வடகரை    - இஷா தீர்த்தம்
      அதன் கிழக்கு                            - வ்ருஷாங்க தீர்த்தம்
அதன் கிழக்கு தென் கரை        -   அகஸ்திய தீர்த்தம்
    அதன் கிழக்கு                            -  சக்ர தீர்த்தம்
     அதன் கிழக்கு                            - பாவன  தீர்த்தம்
                   உத்தர வாகினி
மேற்கு கரை                                    - வாமன தீர்த்தம்
அதன்  வட  பாகம்                           - ஹேரம்ப தீர்த்தம்
அதன் முன் பாகம்                        -  நார சிங்க தீர்த்தம்
         கீழக்கரை                                 - போகி ராஜ தீர்த்தம்

பின் பாண  தீர்த்தம்
பாண  தீர்த்தம் முதல் கல்யாண தீர்த்தம் வரை

மேலக் கரையில்                         - பாஞ்ச ஜன்ய தீர்த்தம்
அதன் சமீபம் வட  திசை           - சுக்கிர சிலா தீர்த்தம்
அதன் வட திசை                          - வராஹ தீர்த்தம்
அதன் வட திசை                          -  முனி தீர்த்தம்
கீழக் கரையில்                             -  பிசங்கிலா தீர்த்தம்
அதன் வடக்கு                              -   கன்னியா தீர்த்தம் ( குங்குமப் பாறை )

அதன் வடக்கு                               -  வருண தீர்த்தம்
மேலக் கரையில்                          - ரமா தீர்த்தம் ( கலை மான் முகப் பாறை )

அதன் வட திசை                        -   கபிலா தீர்த்தம்
பிறகு  கல்யாண தீர்த்தம் 

தாம்ரபரணி - 4

தாம்ரபரணி - 4
தாம்ரபரணியில் தீர்த்த யாத்திரை
தாம்ரபர்ணி நதியானவள் பொதிகை மலையிலுள்ள குப்த ஸ்ருங்கம் எனப்படும் கொடுமுடியிலிருக்கும் குஹையிலிருந்து உற்பத்தியாகி
முதலில் பூர்வ வாகினியாக ( கிழக்கு  திசையில் ) பாய்ந்து கலம்பகர்த்தம் என்று அழைக்கப் படும் பெரிய தடாகத்தில் அருவியாக விழுகிறாள்.
இந்த  கலம்பகர்த்தம் தான் புகழ் பெற்ற பாண  தீர்த்தம் ஆகும்.
இதன் பெயர் காரணத்திற்கு ஒரு புராண வரலாறு உண்டு.
முற்காலத்தில் த்ரிபுரர்கள் என்னும் கொடிய அசுரர்களால் உலகம் துன்புற்ற பொழுது பரமேஸ்வரன் மிகவும் கோபம் கொண்டு பூமியை ரதமாகவும் பிரம்மாவை சாரதியாகவும்  மேரு மலையை வில்லாகவும் விஷ்ணுவைப் பாணமாகவும் தரித்து அவர்களை வதம்  செய்தார். திரிபுர சம்ஹாரம் ஆன  பின்னும் பாணத்தின் கோபாக்னி குறையாமல் தகித்துக் கொண்டு இருந்ததால் ருத்ர மூர்த்தியானவர் அதை உஷ்ண சமனத்திற்காக கலம்பகர்த்த தடாகக் குழியில் வைத்தார்.
அந்தக் குழியில் மிகுந்த வெப்பத்துடன் ஜொலித்துக் கொண்டிருந்த பாணத்தின் மீது பெரும் வெள்ளமாக தாம்ரபர்ணி தேவியானவள் பாய்ந்து அதன் தாபத்தை தீர்த்தாள். ஸ்ரீ நாராயணன் பாண ரூபம் பெற்று தாம்ரபர்ணியால் ஆராதிக்கப் பட்டதால் பாண தீர்த்தம் என்று புகழ் பெற்றது.
இந்த பாண  தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணுவோர் ஸ்ரீ நாராயணனுடைய அருளைப் பெறுகின்றனர் என்றும் பிரயாகை முதலான பற்பல புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம் தங்களின் சுத்திக்காக ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் இங்கு வருகின்றன, என்றும் ஹயக்ரீவ முனிவரின் வாக்காக தாம்ரபர்ணி மாஹாத்மியம் கூறுகிறது.
 

தாம்ரபரணி-3

தாம்ரபரணி-3
பின்னர் உரிய காலம் வந்தவுடன் நதி ரூபம் அடைந்து அகஸ்திய முனிவருடன் புறப்பட்டு கிரமமாகப்  பல புண்ணிய தீர்த்தங்களை உருவாக்கி சமுத்ர ராஜனோடு சேர்ந்தாள்.
பகீரத மகாராஜாவின் விஷயத்தில் கங்கா தேவியானவள் தேவ லோகத்தை விட்டு பூலோகம் வந்தது போல லோக மாதாவான ஸ்ரீ தாம்ரபர்ணி தேவியானவள் பாரத பூமியின் தென் திசையில் எழுந்தருளி  ஸமஸ்தமான ஜனங்களின் பாபத்தையும் தாகத்தையும் போக்குகிறாள்.
இந்த நதி தேவியின் சரிதத்தை கேட்டவர்களும் படித்தவர்களும் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைகின்றனர், என்று சூத பௌராணிகர் கூறினார்.
 

தாம்ரபரணி - 2

தாம்ரபரணி - 2
 உடனே சிவபெருமான் உலகச் சமன் செய்யும் பொருட்டு அகஸ்திய முனிவரையும் லோபாமுதிரையையும் தென் திசை செல்லுமாறு பணித்து கல்யாண கோலத்தை அங்கே காணலாம் என்றும் உறுதி அளித்தார்.
முன்பு பராசக்தியால் அளிக்கப் பட்டதும், திருமண வைபவத்தில் பார்வதியால் தோள் மாலையாக அணிவிக்கப் பட்டதுமான தாமிரை மாலையை சிவன் அகஸ்தியரிடம் அளித்தார்.
அந்த மாலையை அகஸ்தியர் பெற்றுக் கொண்டதும், அது ஒரு பெண்ணாக மாறியது. அங்கு கூடியிருந்த தேவர்கள் பூமாரி பெய்து, தாமிரை மாலையிலிருந்து தோன்றியதால் தாமிரைபர்ணி என்றும் நல்ல அருண சிவந்த வர்ணமுள்ளதால் தாம்ரபர்ணி என்றும் பலவாறு புகழ்ந்து போற்றினர்.
மேலும் அந்த தாம்ரபர்ணி  தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும் உரிய காலத்தில் நதி உருவம் பெற்று சிறந்த மேன்மையை உண்டாக்குவாள்  என்றும் ஈஸ்வரன் அருளிச் செய்து அவளையும் தென் திசைக்கு அழைத்து செல்லுமாறு அகஸ்தியருக்கு உத்தரவிட்டார்.
அகஸ்தியரும் சிவனை வலம்  வந்து கைலாச பர்வதத்திலிருந்து  புறப்பட்டு மலைய பர்வதம் என்னும் பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.
அங்கு மலைய பர்வத ராஜன் தனது மனைவி நந்த தேவியுடன் சிறப்பாக வரவேற்று பூஜைகள் செய்தான். முனிவரின் உத்தரவுப்படி தாம்ரபர்ணி தேவியை தன் புத்திரியாக ஸ்வீகாரம் செய்து கொண்டு வளர்த்து வந்தான்.

 

Tuesday, July 3, 2012

தாம்ரபரணி -1

தாம்ரபரணி -1
தக்ஷ பிரஜாபதியின் புதல்வியாக இருந்த தாக்ஷாயணி தக்ஷன் செய்த சிவ அபராதத்தால் தக்ஷ யாகத்தில் சரீரத் த்யாகம் செய்தாள். மறுபடியும் ஹிமவானின் மகளாக பார்வதியாக அவதாரம் செய்து பரமேஸ்வரனை மணம் செய்யும் பொருட்டு ஸ்ரீ புர  தேவியான பரா சக்தியை  இடைவிடாது ஆராதனை செய்து வரும்போது  பராசக்தி அம்பிகை முன் தோன்றி ஒரு தாமிரை புஷ்ப மாலையை கொடுத்து அந்த மாலையால் உலக நன்மை ஏற்படும் என்று வாழ்த்தி அருளினாள். பின்னர் பார்வதி கல்யாண வைபவம் தொடங்கியது.
அதைக் காண அகஸ்திய முனிவரும் தன்  பத்தினியான லோபாமுத்திரையுடன் வந்திருந்தார். உலகம் முழுவதும் அங்கே  கூடி இருந்ததால் தென் திசை உயர்ந்தது.

தாம்ரபரணி

எல்லாம் வல்ல சத்குரு மூர்த்தியின் திருவருளால் இன்று தென் பொதிகை மலையின் ஆபரணமாம் தாம்ரபரணி நதியைப் பற்றி சில விஷயங்கள் எழுத நினைக்கிறேன். 
பல பெரியவர்கள் நடந்த முறையினைப் பின்பற்றி நாமும் நடக்க இறைவனின் துணையை நாடுவோம்.

சிறந்த தவ சீலரும் பௌராணிகர்களில்  சிறந்தவருமான சூத மாமுனிவர்,
ஒரு சமயம் பாரத பூமி முழுவதும் சஞ்சாரம் செய்து அநேக ஆலயங்களையும் புண்ணிய தீர்த்தங்களையும் தரிசித்து பின்னர் நைமிசாரண்யம் என்னும் சௌனகாதி முனிவர்கள் கூடி இருந்த  இடத்தை அடைந்தார்.  அங்கு அந்த தவ சீலர்கள் கேட்டுக் கொண்ட படி தனது யாத்திரை விவரங்களை தெரிவிக்கும் பொழுது அதிசய நதியான தாம்ர பரணியை ப்பற்றி கூறினார்.. Wednesday, February 15, 2012

அரசு

தற்போதைய தமிழக அரசு சிறப்பாக செயல் படவேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். மின்பற்றாக்குறை தீரவில்லை. சென்னை தவிர மற்ற இடங்களில் பல மணிகள் மின் வெட்டு ஏற்படுகிறது. இலவச மின்சாரம் தேவையானவர்களுக்கு மட்டும் வழங்கினால் பொது மக்களுக்கு இன்னும் அதிக அளவு மின்சாரம் கொடுக்க முடியும்.
தேவையில்லாமல் கூடங்குளம் பிரச்னை நீடித்துக் கொண்டே போனால் மின்பற்றாக்குறை சமாளிக்க முடியாமல் போகும்.
சென்னையிலும் அதை சுற்றி அமைந்துள்ள பல வசதியான கல்லூரிகளையும் பெரிய அளவு வணிக நிறுவனங்களையும் சூரிய ஒளி மின்சாரம் பயன் படுத்த வற்புறுத்த வேண்டும்.
தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் பயன் படுத்த வேண்டும். தெரு விளக்குகளுக்கும் சூரிய ஒளி பயன் படுத்தினால் பொது மக்களுக்கு மின்சாரம் அதிக அளவில் கொடுக்க முடியும்.
கடலில் வீணாக சென்று அடையும் மழை நீரை சரியான முறையில் சேமிக்க திட்டங்கள் வகுக்கப் பட வேண்டும்.
இலவச மடிக்கணினி களுக்குப் பதிலாக இந்தியாவில் தயாராகும் குறைந்த விலை டேபிலேட் என்று சொல்லப் படும் கணினிகளை வழங்கலாம்.
அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும்.
எல்லோருக்கும் இருப்பிடங்களின் அருகிலேயே அரசின் மருத்துவமனைகள் இருக்கும்படி செய்ய வேண்டும்.

Wednesday, January 4, 2012

வாழ்த்துக்கள்

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.