Monday, January 10, 2011

ஸ்ரீஅம்பாள் திருப்பள்ளியெழுச்சி

ஸ்ரீஅம்பாள் திருப்பள்ளியெழுச்சி

1.தூங்கிய கங்கை எழுந்தது தெய்வப் பொலிவு தழைத்திடவே
செங்கதிரோனும் உதய கிரி கண் சேரவரும் தருணம்
மங்கள கீதம் முழங்கியதெங்கும் மந்திரம் ஓங்கின காண்
பங்கஜ லோசனி சங்கரியே நீ பள்ளி யெழுந்தருள்வாய்
பார்முழுதும் சிவ பரிமள மோங்க பள்ளி யெழுந்தருள்வாய்
பங்கஜ லோசனி சங்கரியே நீ பள்ளி யெழுந்தருள்வாய்!

2.தேவரும் முனிவரும் திரளாய் வந்து திருப் பணி புரிகின்றார்
ஆவலுடன் நின தரண் மனை வாயிலில் அரசரும் நிறைகின்றார்
சேவல் எழுந்தது சங்கோடு துந்துபி ஜெய ஜெய என்பது காண்
பாவனி கெளரி பவானி மகேஸ்வரி பள்ளி எழுந்தருள்வாய்!

3.சஞ்சல இரவு முடிந்தது சமரச சாந்த சமாதியினுள்
மஞ்சுள வனஜம் மலர்ந்தது ஹம்ச மனோஹர வாரியிலே
விஞ்சிய இன்பம் மிதந்து தவழ்ந்தது வேத மிசைப் பது காண்
பஞ்ச மனோபவ ரூபிணி பகவதி பள்ளி எழுந்தருள்வாய்!

4.முருகனும் மதகஜ வதனனும் நின் திரு முன் வர வருகின்றார்
அருளலைப் போல் ஹர ஹர யெனும் அடியவர் அவர் பின்னர் வருகின்றார்
தருமம் தழைய தவ முறை வளர தரணி விளங்கிடவே
பருகிய கருணைப் பெருகவுமினி நீ பள்ளி யெழுந்தருள்வாய்!

No comments:

Post a Comment