Tuesday, May 30, 2017

ஆசௌசம் – வ்ருத்தி,சீதகம் நாட்கள்ஆசௌச காண்டம்

ஆசௌசம் – வ்ருத்தி,சீதகம் நாட்கள்
ஆசௌச காண்டம் – ஆசௌசம் என்றால் ஜ்ஞாதிகள் முதலானவர்கள் பிறந்த போதாவது இறந்த போதாவது அசுசியாக இருப்பது. தானம் முதலான கர்மங்களில் யோக்கியமில்லாமையைத் தெரிவிப்பதும், புண்யாதி கர்மாக்களைச் செய்யக்கூடாமல் விசேஷமான பாபரூபமாகவும் இருப்பதற்கு ஆசௌசம் என்று சொல்லப்படுகிறது.
ஸ்நானத்தால் போகக்கூடிய ஆசௌசம் எதுவெனில் அறிந்த சம்பந்தத்தையுடைய பந்துக்களின் மரணம் முதலானவைகளால் ஏற்பட்ட ஆசௌசங்கள்.
காலம்,ஸ்நானம் இவ்விரண்டிலும் போக்கக்கூடிய ஆசௌசம் எதுவெனில்  ஜ்ஞாதிகளின் பிறப்பு,இறப்பு இவைகளால் ஏற்பட்ட ஆசௌசங்கள்.
எது ப்ரேத பிண்டதானம் முதலானவைகளைச் செய்யக் காரணமாயும், அசுசியாக இருத்தலைச் செய்வதாயும் இருந்து கொண்டு,ஒருவனை அண்டிக்கொண்டு காலம்,ஸ்நானம் இவைகளால் போகக்கூடியதாக இருக்கிறதோ அதுவே ஆசௌசம் என்று சொல்லப்படுகிறது.
1.ஜ்ஞாதிகள் – ஜ்ஞாதிகள் இருவகைப்படும். முதலாவது ஸபிண்டர்கள், அதாவது பத்து நாள் தாயாதர்கள். 2வது ஸமானோதகர்கள்,அதாவது மூன்று நாள் தாயாதர்கள். அவர்களுள் ஸபிண்டர்கள் என்பது கூடஸ்தனிலிருந்து ஏழு தலைமுறை வரையில் உள்ளவர்கள். ஸமானோதகர்கள் எட்டாவது தலைமுறை முதல் பதினான்காவது தலைமுறை வரையிலுள்ளவர்கள்.
2.ஒருவனுக்கு பிதா,பிதாமஹன்,ப்ரபிதாமஹன்,புத்ரன்,பௌத்ரன்,ப்ரபௌத்ரன், இவன் உள்பட ஏழுதலைமுறை.

3.தகப்பன் பிள்ளைகளும்,அண்ணன் தம்பிகளும் தாயாதர்களே.  

                                           2. பிறப்புத்தீட்டு
1.      நாலாவது மாசத்தில், கர்ப்பத்தின் விச்சித்தி உண்டானால் பிதாவுக்கு ஸ்நானம், மாதாவுக்கு 4 நாள் தீட்டு.
 5,6 மாசங்களில் விச்சித்தியுண்டானால் பிதாவுக்கும் ஸபிண்டர்களுக்கும் ஸ்நானம். பிண்டம் போல் விழுந்தால் மேற்சொன்னவர்களுக்கு 3 நாள் தீட்டு. மாதாவுக்கு 5வது  மாசத்தில் 5 நாள், 6வது மாசத்தில் 6 நாள் தீட்டு.

2.      ஏழாவது மாசம் முதல் பிறந்தது பிள்ளையானால் மாதாபிதாக்களுக்கும் ஸபிண்டர்களுக்கும் பத்து நாள் தீட்டும், ஸமானோதகர்களுக்கு 3 நாள் தீட்டுமுண்டு.
3.      புருஷ சிசுவானால் 30 தினங்களுக்குப் பிறகும், ஸ்த்ரீ சிசுவானால் 40 தினங்களுக்குப் பிறகும் மாதாவுக்கு பாண்டஸ்பர்ச யோக்யதை உண்டாகும்.  
4.      ஜனனத்தில் பிதாவுக்கு 2 நாழிகை சுத்தி. வெகுதூரத்தில் இருந்தால் ஒருநாள் சுத்தி.  அல்பதூரத்திலிருந்தால் ஒரு பகல் சுத்தி.  


                                          3.இறப்புத்தீட்டு
                    1. பத்து நாள் தீட்டு
1.தசராத்ரஜ்ஞாதிகளின் மரணத்தில் ஆசௌசம்.
2.பிறந்து பத்து நாட்களுக்கு மேல் புருஷசிசுவின் மரணத்திலும், விவாஹம் வரையில் ஸ்த்ரீப்ரஜையின் மரணத்திலும், தாய்,பிதா,பின்னோதரப்ராதா,ஸஹோதரப்ராதா இவர்களுக்கு 10 நாள் தீட்டு.
3. 7 வயதிற்குட்பட்டு உபநயனமான தசராத்ரஜ்ஞாதிகளின் பிள்ளைகள் இறந்தால் 10 நாள் தீட்டு.
4.  7 வயது முதல் உபநயனமானாலும், ஆகாமலிருந்தாலும் புருஷப்ரஜையின் மரணத்தில் 10 நாள் தீட்டு.
                             2. புருஷர்களுக்கு மூன்றுநாள் தீட்டு
1.மாதாமஹன், 2.மாதாமஹீ, 3. அம்மான், 4.அம்மாமி, 5.மாமனார், 6.மாமியார், 7.தாயின் ஸஹோதரி, 8.தகப்பனின் ஸஹோதரி. 9.உபநீதனான மருமான், 10.உபநீதனான தௌஹித்ரன், 11.உபநீதனான ஸமானோதகன், 12.விவாஹமான பெண், 13.ஸஹோதரி, 14.ஜனகமாதா,
15.ஜனகபிதா, 16.தத்தனான பிள்ளை,
17. 25வது மாசம் முதல் 6 வருஷம் முடிய அனுபநீதனான தசராத்ரஜ்ஞாதிகளின் பிள்ளை,
18. 24 மாசங்களுக்குட்பட்டு சௌளமாகிவிட்ட ஜ்ஞாதிகளின் பிள்ளை,
19. 7 வது வருஷம் முதல் விவாஹம் வரையில் தசராத்ரஜ்ஞாதிகளின் பெண் ( ஸ்த்ரீ சிசு விஷயத்தில் 3 தலைமுறை வரையில் தான் ஸாபிண்ட்யமென்பதை கவனிக்கவும். )>
                     20. ஸமானோதகர்களுக்கு
1.ஏழு வயதிற்குட்பட்டு உபநயமான ஜ்ஞாதிகளின் பிள்ளை.
2.ஏழு வயது முதல் உபநயனமானாலும்  ஆகாவிட்டாலும் ஜ்ஞாதிகளின் பிள்ளை.
இவர்களின் மரணத்தில் 3 நாள் தீட்டு.
   

                    3.புருஷர்களுக்கு பக்ஷிணித்தீட்டு
(பக்ஷிணி என்பது இரண்டு இரவும் ஒருபகலும் அல்லது ஒரு இரவும் இரண்டு பகலும் உள்ள் காலம்)
1.அத்தையின் பிள்ளை, பெண்
2.அம்மானுடைய பிள்ளை,பெண்
3.தாய் ஸஹோதரியின் பிள்ளை,பெண்
4.ஸஹோதரின் பெண்
5.ஸஹோதரனுடைய கல்யாணமான பெண்
6.பித்ருவ்யனுடைய பெண்
7.பௌத்ரீ
8.தௌஹித்ரீ
9. 3 வயதிற்கு மேல் உபநயனமில்லாத மருமான்,தௌஹித்ரன்
         
                   4.புருஷர்களுக்கு 1 நாள் தீட்டு
1.ஸபத்னீமாதாவின் ஸஹோதரன்,ஸஹோதரி,பெண்
2.மேற்கண்ட மூவருடைய பெண்,பிள்ளை
3.மைத்துனன்
4.பின்னோதரர்களான சிறியதகப்பன்,பெரிய தகப்பன் இவர்களின் பெண்
5.பின்னோதர ப்ராதாவின் பெண்
6.பின்னோதர அத்தை
7.மேற்படியாளுடைய பெண்,பிள்ளை
8.ஸபத்னீமாதாவின் தகப்பன்,தாயார்
9. 25வது மாசம் முதல் 6 வருஷம் முடிவு வரையில் விவாஹமாகாத ஜ்ஞாதியின் பெண்
10. ஜநக ப்ராதா
11.ஜநக ஸபிண்டன்
12.பத்னீ,அவள் ஸந்ததி இரண்டுமில்லாத விஷயத்தில் மாமனார்,மாமியார்
13. 6 மாசத்திற்கு மேல் 24 மாசத்திற்குட்பட்ட சௌளமாகாத ஜ்ஞாதியின் பிள்ளை


4.ஸ்த்ரீகளுக்குப் பர்த்தாவுடன் ஏற்படும் தீட்டைத்தவிர தனிமையாக ஏற்படும் தீட்டுகள்
                 1.ஸ்த்ரீகளுக்கு 3 நாள் தீட்டு
1.உபநயனமான ஸஹோதரன்
2.உபநயனமான மருமான்
3.ஸஹோதரியின் உபநயனமான பிள்ளை
4.ஸபத்னீமாதா
                2.ஸ்த்ரீகளுக்கு பக்ஷிண்யாசௌசம்
1.பித்ருவ்யன்,2.தாயின் ஸ்ஹோதரி,3.மாதுலன்,4.அத்தை,
5.மேற்கண்ட நால்வருடைய பிள்ளை,பெண்,
6.பிதாமஹன்,7.பிதாமஹீ,8.மாதாமஹன்,9.மாதாமஹீ,10.ஸஹோதரீ,
11.ஸஹோதரியின் பெண், 12.மருமாள்.
                       3.ஸ்த்ரீகளுக்கு 1 நாள் தீட்டு
1.ஸபத்னீமாதாவின் புத்ரன்,புத்ரீ,பகிநீ,ஸஹோதரன்.
2.மேற்சொன்ன நால்வரின் பெண்கள்,பிள்ளைகள்.
3.பின்னோதர பித்ருவ்யன்,4.பின்னோதர அத்தை,
5.மேற்படி இருவர்களுடைய பெண்கள்,பிள்ளைகள்,
6.ஸபத்னீமாதாவின் தாய்,தகப்பன்

1 comment:

  1. தாயார் இறந்து விட்ட 10 நாட்களுக்குள் தனது அப்பா வகையறாக்கள் இறந்து விட்டால் தயார் காரியங்கள் முடங்கி விடுமா ?

    ReplyDelete