ஞானானந்த
பஞ்சகம் – ஸ்வாமி ஹரிதாஸ்கிரி
அன்பே!
ஆராவமுதே! அருட்கடலே! அவிநாசா!
இன்பப்பொருள்
நீயே! இனி உனை நான்விடுவேனோ?
துன்பம்
இனி அணுகாதென்னை தொழுதேன் உனதடியே!
என்பால்
அருள் செய்யும் ஞானானந்த பெருமானே !
என்பால்
அருள் செய்யும் ஞானானந்த பெருமானே!
அதிகாலையில்
எழுந்தே உனை அனுதினம் துதிப்போரை
விதிதான்
என்னா செய்யும் ஊழ்வினை தான் உடன் வருமோ?
கதி
நீ என்ற கருத்தில் உணர்ந்தேத்தும் எனதுள்ளத்தில்
உதித்தே
எழுந்தருளும் ஞானானந்த பெருமானே!
உதித்தே
எழுந்தருளும் ஞானானந்த பெருமானே!
தனிமை
அது இனிமை என்று தயையோடருள் ஞானக்
கனியே
கனிரஸமே! கார்முகிலே! கண்மணியே!
தனியே உனைக் காண தினம் தவம் செய்கின்றேனே!
தனியே உனைக் காண தினம் தவம் செய்கின்றேனே!
இனியாகிலும்
வருவாய் ஞானானந்த பெருமானே!
இனியாகிலும்
வருவாய் ஞானானந்த பெருமானே!
நினைத்தால்
முக்தியளிக்கும் திருவண்ணாமலையருகில்
என்
நினைப்பாய் வந்தமர்ந்த எந்தன் நினைப்பே! ஞானக்களிப்பே!
அனைத்தும்
அறிவோனே! ஆதிகுருவாய் வருவோனே!
எனையே
உனக்களித்தேன் ஞானானந்த பெருமானே!
எனையே
உனக்களித்தேன் ஞானானந்த பெருமானே!
சிறியேன்
ஒன்றுமறியேன் என்று அறிந்தே அருள் செய்யும்
ஹரியாய்
ஆதிசிவனாய் ஆறுமுகனாய் எப்பொழுதும்
வருவாய்
வந்தருள்வாய் ஹரிதாஸகிரி கல்ப-
தருவே
இது தருணம் ஞானானந்த பெருமானே!
கல்ப
தருவே இது தருணம் ஞானானந்த பெருமானே!
நமஸ்காரங்கள் ; ஞானானந்த கிரி பீடம், தென்னாங்கூர்
நமஸ்காரங்கள் ; ஞானானந்த கிரி பீடம், தென்னாங்கூர்
No comments:
Post a Comment