Thursday, October 11, 2012

ஸ்ராத்தங்கள்

ஒரே நாளில் பல ஸ்ராத்தங்கள் சேர்ந்து வந்தால் செய்ய வேண்டிய ஸ்ராத்தங்கள், விட வேண்டிய ஸ்ராத்தங்கள்.

அமாவாசை அன்று மாதப்பிறப்பும் வந்தால் அன்று மாதப்பிறப்புக்காக மட்டும் தர்ப்பணம் செய்தால் போதும் .

அதே போல அமாவாசை அன்றே மன்வாதி, யுகாதி,வ்யதீபாதம் ,வைத்ருதி , க்ரஹணம் போன்றவைகள் வந்தாலும் அமாவாசை தவிர மற்றவைகளை செய்ய வேண்டும்.

சில நேரங்களில் அமாவாசை அன்று மாலை க்ரஹணம் நிகழ்ந்தால் காலையில் அமாவாசை தர்ப்பணமும் மாலை க்ரஹண தர்ப்பணமும் செய்ய வேண்டும்.

ஒரே நாளில் கீழ்க்கண்ட  ஸ்ராத்தங்கள் சேர்ந்து வந்தால் தனித்தனியாக எல்லாவற்றையும் செய்ய வேண்டியது,
அவைகள் - மாதப்பிறப்பு, யுகாதி , மன்வாதி , க்ரஹணம், அர்த்தோதயம் ,மஹோதயம், வைத்ருதி , வ்யதீபாதம்.



ஒரே நாளில் செய்யும் ஸ்ராத்தங்களின் முன் பின் க்ரமம்

அமாவாசையும் சோதகும்பமும் சேர்ந்து வந்தால் முதலில் சோதகும்பமும் பிறகு அமாவாசையும் செய்ய வேண்டும்.

அதே போல மாஸிகமும் அமாவாசையும் சேர்ந்து வந்தால் முதலில் மாஸிகமும் பிறகு அமாவாசையும் செய்ய வேண்டும்.

அதே போல ப்ரத்யாப்தீகமும் அமாவாசையும் சேர்ந்து வந்தால் முதலில் ப்ரத்யாப்தீகமும் பிறகு அமாவாசையும் செய்ய வேண்டும்.

ப்ரத்யாப்தீகமும் மாசப்பிறப்பு , யுகாதி போன்றவைகள் சேர்ந்து வந்தால்
மாசப்பிறப்பு யுகாதி போன்றவற்றை முதலில் செய்து விட்டு பிறகு ப்ரத்யாப்தீகம் செய்ய வேண்டும்.

ப்ரத்யாப்தீகமும் மாஸிகமும் சேர்ந்து வந்தால் முதலில் மாஸிகமும் பிறகு
ப்ரத்யாப்தீகமும் செய்ய வேண்டும்.

ஆப்தீகமும்  மாஸிகமும் சேர்ந்து வந்தால் முதலில் ஆப்தீகமும் பிறகு மாஸிகமும் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment