Friday, October 12, 2012

பித்ரு ஸ்துதி: ( தமிழ் அர்த்தம் )

பித்ரு ஸ்துதி: ( தமிழ் அர்த்தம் )

ப்ரம்ஹ தேவர் கூறினார்

ஜன்மத்தை அளிப்பவரும் எல்லா தேவர்களின் வடிவானவரும் ஸுகத்தைக் கொடுப்பவரும் மகிழ்ந்தவரும் நல்ல விருப்புடையவரும் பெரியவருமான பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

எல்லா யக்ஞங்களின் வடிவானவருக்கும் ஸ்வர்கமானவருக்கும் ப்ரம்ஹாவானவருக்கும் எல்லா தீர்த்தங்களையும் கண்டவருக்கும் கருணைக் கடலானவருக்கும் நமஸ்காரம்.

 எப்போதும் விரைவில் மகிழ்பவரும் சிவ வடிவானவருமான உமக்கு நமஸ்காரம்.

எப்போதும் பிழைகளைப் பொறுப்பவரும் ஸுக வடிவானவரும் ஸுகத்தை அளிப்பவருமான உமக்கு நமஸ்காரம்.

 கிடைத்தற்கரியதும் அறத்தையும் பொருளையும் பெறுதற் பொருட்டமைந்ததுமான இந்த மனித உடலை எவர் மூலமாக அடைந்தேனோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

 எவருடைய தர்சனம் தீர்த்தம்,ஸ்நானம் ,தவம்,ஹோமம்,ஜபம் முதலியவற்றின் புண்ணிய பலனாக அமையுமோ அத்தகைய மஹாகுருவுக்கும் குருவான பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

எவருடைய நமஸ்காரமும் ஸ்தோத்ரமும் கோடி முறை பித்ருக்களின் தர்ப்பணம் செய்ததற்கும் நூறு அச்வ மேதங்களைச் செய்ததற்கும் ஈடாகுமோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

பித்ரு தேவரின் புண்யமான இந்த ஸ்தோத்ரத்தை எந்த மனிதன் முயற்சியோடு தினமும் காலையில் எழுந்தும் பித்ரு ஸ்ராத்தத்திலும் தன் பிறந்த நாளிலும் பித்ருவின் முன்னின்றும் படிக்கிறானோ, அவனுக்கு   ஸர்வஜ்ஞத்வம் முதலியவற்றில் அடையக் கூடாதது என்று ஒன்றுமில்லை.

 ஒரு மகன் பலவிதமான தீய செயல்களைச் செய்த போதிலும் பித்ரு தேவரை ஸ்தோத்ரம் செய்தால் அவன் பிராயச்சித்தம் செய்து ஸுகமடையலாம். பித்ருக்களுக்கு ப்ரீதியை செய்த அவன் எல்லாக் கர்மாவிலும் தகுதியுடையவனாகிறான்.       

 

No comments:

Post a Comment